நிகழ் காலம் (சிறுகதை)

குழந்தை தூங்கிவிட்ட பின்பும் தொட்டிலை ஆட்டி கொண்டே இருந்தாள் மாலதி. தொலைகாட்சியில் நாடகம் தொனதொனத்து கொண்டிருந்தது, ஆனால் மாலதியோ வேறொரு சிந்தனையில் இருந்தாள்.

வீட்டிற்கு ஒரே பெண். அவள் பிறந்த வீடோ நகரத்தை தள்ளி வெகு தொலைவில் இருந்ததால் சொந்த பந்தங்கள் முக்கிய காரணத்திற்காக மட்டுமே அவர்கள் வீட்டிற்க்கு வந்து சென்றனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டால் நாய் குறைக்கும் சத்தமும், கும்மிருட்டு அமைதி மட்டுமே இருக்கும்.

யாருடன் பேசுவது?

உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அம்மாவுடன் மனம் விட்டு பேச வேண்டியதை தானே பேச முடியும், மாலதியின் அப்பாவோ அவள் தூங்கிய பிறகு தான் வேலை முடித்து வருவார் .

தனிமையிலேயே வாழ்ந்த அவள் திருமணம் என்ற பந்தம் பற்றி விவரம் அறிந்த முதலே அவள் முடிவு செய்து விட்டாள் தன்னை போல் தன் குழைந்தையும் தனிமையில் அவதிப்பட்டு விட கூடாது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய், இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும். ஆணோ, பெண்ணோ இரண்டு குழைந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள்.

பண்ணிரெண்டாம் வகுப்பு முடிந்த உடனே அவளது அப்பா மாப்பிளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பெயர் வசந்த குமார், B.E. Mechanical படிச்சிருக்கார். நல்ல சம்பளம், நல்ல வேலை சொந்த ஊரு சென்னை இந்தாங்க போட்டோ என்று புரோக்கர் நீட்ட அதை வாங்கி பார்த்து விட்டு தன் மகளிடம் கொடுத்தார்.

மாலதிக்கு பிடித்திருந்தது.

வசந்தகுமாரும் சம்மதிக்க திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

வசந்த் திருமணம் முடிந்த கையோடு தனி குடித்தனம் வந்து விட்டான்.

சென்னை புறநகரில் தான் வசந்த குமாரின் வீடு. மீண்டும் மாலதிக்கு அதே தனிமை முன்பாவது அப்பா, அம்மா துணை. இப்போது அதுவும் இல்லை.

சென்னை மிகவும் அசௌகரியமாக  இருந்தது. ஆனாலும் அவள் எதையும் பொருட்படுத்தவில்லை
அவளது எண்ணம் முழுவதும் தன்னுடைய வருங்கால குழைந்தைகளை பற்றியதாக இருந்தது.

அன்று குழந்தை தூங்கிவிட்ட பின்பும் தொட்டிலை ஆட்டி கொண்டே இருந்தாள் மாலதி. தொலைகாட்சியில் நாடகம் தொனதொனத்து கொண்டிருந்தது, ஆனால் மாலதியோ வேறொரு சிந்தனையில் இருந்தாள்.

வசந்திடம் எவ்வளவு சொல்லியும் ஒரு குழைந்தை போதும் என்று முடிவாக சொல்லி விட்டான். இதனால் சண்டை சச்சரவு என்று தொடங்கி இப்போது இருவரும் பேசி கொள்வதே இல்லை.

வசந்த் வேலை முடித்து வீட்டிற்குள் வந்தான். கட்டிலில் காலை நீட்டி அமர்ந்திருந்த அவள் காலை மடக்கி அமர்ந்து கொண்டாள்.

பத்ரூம்குள் சென்ற வசந்த், சோப்பு இல்ல என்று கத்தினான். மாலதி சோப்பு எடுத்து பாத்ரூம் கதவை தட்டினால். கதவை திறந்து சோப்பை வாங்கி கொண்டு கதவை சாத்திவிட்டு மீண்டும் திறந்தான். இன்னும் உனக்கு மனசு மாறலையா? நீ ஏன் புரிஞ்சிக்கவே மாற்ற மாலதி.

நான் புரிஞ்சிக்குரதுக்கு ஒன்னும் இல்லை. நீங்க தான் என்னமோ பெரிய விஷயமா எடுத்து பேசுறீங்க. ஊர்ல எல்லோரும் தான் ரெண்டு, மூணு பிள்ளைங்கன்னு பெத்துக்குறாங்க.

மத்தவங்கள பத்தி நாம ஏன் பேசணும். நம்மளோட நிலமைய பாரு.

மாதம் இருபத்தி எட்டாயிரம் சம்பாதிக்கிறேன்னு தான் பேரு. கைல மிஞ்சுறது ஏழோ, எட்டு தான். குழைந்த பிறந்த அப்புறம் அதுவும் செலவு ஆய்டுது. குழைந்த வளந்த அப்புறம் அவன பள்ளியில சேக்குறதுக்கே டொனேசன் ஐம்பது ஆயிரம் தரணுமாம். என் சக்திக்கு ஏத்த மாதிரி தான் என்னால செயல்பட முடியும்.

அப்படின்னா உங்களுக்கு காசு பணம் தான் பிரச்சனையா போச்சுல்ல.

இல்ல. இருக்குறத வச்சி சந்தோசமா வாழுறத பத்தி பேசிட்டு இருக்கேன்.
இன்னக்கி சென்னை இடுக்குல கால் வைக்க முடியல. எங்க பாத்தாலும் ஒரே ஜனங்க கூட்டம். எதுக்கும் போட்டி, காசு காசுன்னு ஊரே நாரி கிட்டு கெடக்குது. போதும்.
வெளியே போய் அலைஞ்சிட்டு வர எங்களுக்கு தான் தெரியும் கஷ்டம். என்று சொல்லி விட்டு கதவை சாத்தி கொண்டான்.

மாலதிக்கு அழுகை தான் மிச்சம். பேசி பலனில்லை.

வசந்திற்கும் மாலதியின் எண்ணம் புரியாமல் இல்லை. இருந்தாலும் அவன் பொறுமை காத்தான். அவசர படவில்லை.

இரண்டு நாட்கள் பிறகு.

வசந்த் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தான். மாலதி குழைந்தையை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போகணும் என்றாள்.

எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ கூட்டி போயிட்டு வா என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

இவளுக்கு வசந்தின் மேல் மேலும் கோபம் வந்தது. வீட்டு வேலை முடித்து விட்டு குழைந்தையை தூக்கி கொண்டு இரு சக்கர வாகனத்தை எடுத்து ஆஸ்பத்திரிக்கு கிளம்பினால்.

குழைந்தை பேரு என்ன மேடம்? என்றாள் நர்ஸ்.
ஆகேஷ் என்றாள் மாலதி.

நர்ஸ் கம்ப்யூட்டர்ல் வரிசை படி பெயர் பார்த்து கொண்டிருந்தாள். அப்போது மாலதி, பெயர் எல்லாம் கொடுக்கல என்றாள்.

நர்ஸ் தேடுவதை நிறுத்தி விட்டு, சாரி மேடம். ஒரு வாரம் முன்னாடியே நீங்க பேர் கொடுத்த தான் டாக்டர் குழைந்தைய பார்ப்பாங்க. நீங்க இப்போ நேம் புக் பண்ணிகோங்க. போய்ட்டு
ஒரு வாரம் கழிச்சி வாங்க.

குழைந்தைக்கு ஜுரம் அதிகமா இருக்கு.

ம்! அதுக்கு இப்போதைக்கு மருந்து எழுதி தரேன் என்று சொல்லி விட்டு. மருந்து சீட்டு நோட்டில் இருந்து ஒரு தாளை கிழித்து தந்தாள்.

என்ன மேடம் வெறும் பேப்பர் தரீங்க என கேட்டாள் மாலதி.

அதுல மெடிசென் பிரிண்ட் ஆகி இருக்கு பாருங்க என்றால் நர்ஸ்.

ஓ! இப்போ இப்படி எல்லாம் மருந்து சீட்டு தர்ரங்கள? என்று சொல்லி மாலதி மருந்து சீட்டை வாங்கி வைத்து கொண்டாள்.

பீஸ் எவ்வளவு மேடம். டு பிவ்டி. பணத்தை எடுத்து குடுத்து விட்டு கிளம்பினாள்.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த அவள் தனது வண்டியை ஸ்டார்ட் செய்ய கிக்கரை மிதித்தாள். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.

பலமுறை முயன்றால் ஸ்டார்ட் ஆவதாக தெரியவில்லை. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று தனது பார்வையை சுழற்றினாள்.

இயந்திரத்திற்கு கீ கொடுத்தது போல நிதானம் இன்றி பரபரத்து கொண்டிருந்தது நகரம்.ஒவ்வொருவரின் முகத்திலும் கால அட்டவணை (schedule notice) ஒட்டியிருந்தது. யார் முகத்திலும் சாந்தம் தெரிவதாக இல்லை.

முகத்தில் பரபரப்புடன் வேகமாக நடந்து கொண்டிருக்கும் யாரேனும் ஒருவரை நிறுத்தினால் பளார் என்று கன்னத்தில் அறைந்து விடுவார் போல் மனதில் தோன்றியது.

யாரிடமும் உதவி கேட்க்க தோன்றவில்லை அவளுக்கு. வண்டியை மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு சென்று காண்பித்தாள்.

பிஸ்டல் போய்டுச்சு, வண்டி வேற சர்வீஸ் விடல போல. ஒரே டஸ்ட்-அ இருக்கு மேடம் என்றான் மெக்கானிக்.

சரி வெயிட் பண்றேன், பண்ணி தாங்க.

மேடம் அஞ்சி நாள் ஆவும்.

அவ்வளோ பெரிய வேலைய?

இந்தா பாருங்க ஏற்கனவே எட்டு வண்டி நிக்குது இது முடிஞ்சா அப்புறம் தான் பாக்க முடியும்.  அஞ்சி நாள் கழிச்சி வந்து வாங்கிகோங்க இல்லன உங்க அட்ரஸ் கொடுத்துட்டு போங்க.. வண்டி கொண்டந்து விடுறோம். ஹோம் டெலிவரின்ன அதுக்கு தனிய நூறு ரூபா ஆகும் மேடம்.

சரிப்பா அட்ரஸ் எழுதிக்கோ என்று சொல்லி விட்டு பஸ் ஸ்டாப்க்கு வரும் பொழுது இரவு ஏழு மணி ஆகி விட்டது.

முகத்தில் களைப்பு. கால்கள் சிறுது நேர ஓய்வுக்கு ஏங்கியது. அமர கூட இடமில்லை.

தனது சொந்த அத்தை மகளிடம் இருந்து போன் அழைப்பு. எடுத்து பேசினால். இருவரும் நலம் விசாரித்து கொண்டனர்.

பிறகு அக்கா மகள் சந்தோசமாக ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டால்.

ஹேய் மாலதி என் பிள்ளைக்கு சரஸ்வதி மெட்ரிகுலேசன் ஸ்கூல்ள்ள சீட் கிடைச்சிருக்கு டி. நல்ல வேல குழைந்தை பிறந்தப்பவே பதிவு செஞ்சி வைத்தோம்.. சரி, உன் குழைந்தைக்கு பதிவு செஞ்சி வச்சாச்ச?

அக்கா என்ன விளயாடுரேயா? குழைந்தைக்கு இப்போ தான் ரெண்டு வயசு ஆகுது.

ரெண்டு வயச? அடிபாவி இன்னுமா பதியல? நீ என்ன நம்ம படிக்கிற காலத்துல இருந்த மாதிரி நினச்சிடிய? சீக்கிரமா சொல்லி பதிய சொல்லு உன் புருஷன் கிட்ட இல்லன சீட்டு கிடைக்குறது கஷ்டம். அப்புறம் உன் பிள்ளைய ஏதாவது சின்ன ஸ்கூல்ள்ள சேக்க வேண்டியதாகிடும் என்று சொல்லி முடிக்கும் போது... மாலதி நிகழ் காலத்தில் இருப்பதை உணர்ந்தாள். உலகம் மாறி இருப்பதை உணர்ந்தாள். சற்று நேரம் அவளுக்கு பதில் அளிக்கவில்லை. வேறு மாதிரியான எண்ணங்களில் இருந்த அவளது சிந்தை சற்று பிரமித்தும், அதிர்ந்தும் போய் இருந்தது.

ஹலோ ஹலோ என்ற குரல் மாலதி மூளைக்கு எட்டியவுடன் ம்ம்ம் சொல்லுங்க என்றால்.

தூரத்தில் அவள் ஏற வேண்டிய பேருந்து வந்து கொண்டிருந்தது. இவள். அக்கா நான் அப்புறம் பேசுறேன் எனக்கு பஸ் வந்துருச்சு என்று சொல்லி கட் செய்தால்.

பேருந்து ஏறுவதற்கு முன் வைத்த காலை நிறுத்தினால்.
பேருந்தின் வடிவமே வேறு மாதிரியாக இருந்தது.

இட புறத்தில் சாய்ந்தும், வல புறத்தில் சற்று உயர்ந்தும் இருந்தது. வண்டியின் சக்கரம் சாலையில் பாதிக்கும் மேல் அமுங்கி இருந்தது. இதற்க்கு மேல் இநத பேருந்தில் ஒருவர் ஏறினாலும் வண்டி கவிழ்ந்து விடும் போல் தோன்றியது.

இப்படி ஒரு கூட்டத்தை அது வரை தன் சொந்த ஊரிலும் கூட பார்த்தது இல்லை. நேரமாகி விட்டது.

அதனால் இநத பேருந்திலேயே கஷ்ட பட்டு ஏற முற்பட்டால். கூட்ட நெரிசலில் இடுப்பில் வைத்திருந்த குழைந்தை முகம் சற்று நசுக்க படவே வீர்ர்ர்ர்ர்ர் என்று அழ தொடங்கியது. மாலதி திக்கு முக்காடி போனால். படியும் கண்ணில் தெரியவில்லை. குழைந்தை அழுகை சத்தம். இறங்க வேண்டிய கூட்டம் மேலிருந்து கிழே தள்ள. ஏற வேண்டிய கூட்டம்  கீழிருந்து மேலே தள்ள. இநத நேரத்தில் வண்டி லேசாக நகர தொடங்கியது. அவசர அவசரமாக இறங்க முற்பட்ட கூட்டம் மேலே ஏறிய கூட்டத்தை படியை விட்டு தள்ளியது. கேட்க கூடாத கொச்சை வார்த்தைகளும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டது. கடைசியாக ஏறி கொண்டிருந்த கூட்டத்தை கிழே தள்ளி இறங்கினர். நல்ல வேலை மாலதி ஏறி கொண்டாள்.

பேருந்து மாலதி சென்று அடைய வேண்டிய இடத்திற்கு இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் ஒரு வழியாக சென்றடைந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய மாலதி பெரு மூச்சு விட்டால். அதன் தொடர்ச்சியாக குழைந்தையும். குழைந்தை சாதரணமாக பார்ப்பது மாலதிக்கு முறைப்பது போல தெரிந்தது.

மருந்து சீட்டை எடுத்து மெடிக்கல் ஷாபுக்கு போய் மருந்து வாங்கினால். அவள் கண்ணில் அது பட்டது. இன்று நிகழ்ந்த நிகழ்வுகளால் அவள் உணர கூடியதை உணர்ந்திருந்தால். அவளுக்கு அது கட்டாயம் தேவை என்று பட்டது. மருந்துடன் அதையும் வாங்கி கொண்டு கிளம்பினால்.

வீட்டிற்கு சென்று அலங்கோலமாக கிடந்ததையெல்லாம் சரி செய்து விட்டு, அவள் கொண்டு வந்த அதை கட்டில் அருகில் இருக்கும் டிராயர் குள்ளே வைத்து விட்டு, முகம் கழுவி புத்துணர்ச்சியுடன் அமர்ந்திருந்தால்.

வசந்த் வண்டி சத்தம் கேட்டதும், மாலதி மனதுக்குள் ஏதோ ஒரு சந்தோசம்.

வேகமாக உள்ளே வந்த வசந்த் மறந்து வைத்து விட்டு போன செல் போனை தேட ஆரம்பித்தான்.

வந்ததும் வராததுமா என்ன தேடுறீங்க?

என் செல் போன்-அ ஆபீஸ் போகும் போது மறந்து வச்சிட்டேன். எங்க வச்சேன்னு தெரியல.

அப்படியா எனக்கும் தெரியலையே! ஒரு வேலை இந்த டிராயர் குள்ள இருக்கான்னு பாருங்க என்று தான் அமர்ந்து இருக்கும் கட்டில் அருகில் உள்ள டிராயரை காட்டினாள்.

டிராயர் அருகில் வந்த வசந்த் டிராயரை திறந்தான். அதில் செல் போன் இல்லை. ஒரு காண்டம் பாக்கெட் இருந்தது. புருவத்துடன் கண்களை உயர்த்தி பார்க்கும் பொழுது மாலதி புன்னகையுடன் என்னை மன்னிச்சிருங்க ப்ளீஸ் என்றாள்.

இருபது நிமிடம் பிறகு. இன்று தனக்கு நிகழ்ந்த நிகழ்வுகளை தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டு, இருவரும் பேசி சமாதானம் ஆகினர். மாலதி, வசந்தின் அன்பு அரவணைப்பில் இருந்தாள்.

இந்தாங்க உங்க செல் போன் எதையாவது தொலைச்சிட்டு டென்ஷன் ஆகுறது.

நான் எத தொலச்சலும் தேடி கொடுக்க தான் நீ இருக்கேயே.

சாரிங்க, இவ்வளவு நாள் எனக்கு புரியல. இன்னக்கி தான் நான் நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டேன். இவ்வளவு நாள் நீங்க சொல்றது கேக்காம ரொம்ப சண்ட போட்டுட்டேன் சாரி.

சரி விடு மாலதி. அப்புறம், ஒரு நல்ல விஷயம் வீடு புறநகர்ல இருக்குறதுனால தான உனக்கு ரொம்ப தனிமையா இருக்கு. நாம கொஞ்ச நாள்குள்ள சிட்டி பக்கத்துல குடி போய்டலாம், அதுக்காக வீடு பாத்துட்டு இருக்கேன் சரியா.

சரிங்க என்று சொல்லி வசந்தின் நெற்றியில் முத்தமிட்டாள் மாலதி.


- திவான்

No comments:

Post a Comment