பெர்முடா குறியீடு (சிறுகதை)

பெங்களூர் நோக்கி ட்ரையின் சென்று கொண்டிருந்தது.

ரிசர்வுடு (Reserved) கம்பார்ட்மென்டில், அப்பரில் (Upper) படுத்தபடி பயணித்து கொண்டிருந்தான் நந்தபாலா.

நந்தபாலாவுக்கு நார்பெத்தேட்டு வயது. சற்று நரைத்த முடி. இந்த வயதிலும் தொப்பை போடாத வயிறு. பார்ப்பதற்கு இளமையாக தெரியும் தோற்றம். கொஞ்சம் குழப்பவாதி. சில விசயங்களை விடாமல் குழப்பி கொள்வான்.

கண் ஆப்பிரேசனுக்குரிய  உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் பாலிமர் டிப்பார்மெண்டில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு ஊழியன்.

வேலை பார்ப்பது சென்னை தான் என்றாலும். அடிகடி பெங்களூரில் உள்ள ஹெட் ஆபிஸ்க்கு (Head Office) சென்று வர வேண்டிய வேலை இருக்கும். இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மருத்துவமனைகளின் தலைமை அதிகாரிகளுக்கு தங்களுடைய ப்ராடக்ட் (Product) பற்றிய விரிவுரைகளை தர வேண்டி இந்த பயணம் அடிகடி நடைபெறும்.

இரவு இரண்டு மணி இருக்கும். வேலூரை தாண்டி ட்ரையின் சென்று கொண்டிருந்தது.

நந்தபாலா ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டி அரை தூக்கத்தில் தடுமாறி கொண்டே எழுந்து சென்றான்.

பாத்ரூம் கதவை திறந்து உள்ளே சென்றான். இவனும் ஆட, ட்ரையினும் ஆட வந்த வேலை முடிந்து கொண்டிருந்தது. பாத்ரூமில் அங்கே இங்கே என நிறைய கிறுக்கபட்டிருந்தன. ஷாலினி லவ் கார்த்திக், இத படிக்கிறவன் தே...., ரூட்டு நம்பர், பேரு திவ்யா என்று ஒரு மொபைல் நம்பர் என நிறைய எழுதி இருந்தது. சில ஆபாசமான படங்களும் வரைய பட்டிருந்தது. அங்கே ஒரு சிம்பல் (முத்திரை (அ) குறியீடு) வரைய பட்டிருந்தது. பார்த்த உடனே சிறுது நேரம் ஈர்க்கும் வண்ணம் இருந்தது. மனதிலும் பதிந்து விடும். பார்க்காமல் வரைய சொன்னாலும் உடனே வரைந்து விட முடியும் பார்ப்பதற்கு ஹிந்தி எழுத்தை போல இருந்தது. கோடுகளில் அடக்கி பார்த்தால் முக்கோண (Bermuda) வடிவில் இருக்கும் அந்த குறியீடு. அந்த சிம்பல் கவனம் ஈர்த்த உடனே இவனுக்கு தூக்கம் தெளிந்தது.



பிறகு சென்று படுத்தான். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வரவே ஒரு மணி நேரம் பிடித்தது.

பெங்களூரில் மீட்டிங் நாளை என்றால் அதற்கு முந்தய நாளே வந்து தங்கி விடுவது வழக்கம். தன்னுடைய லாப்டாப்பில் ப்ராஜெக்ட்-ஐ பற்றிய தகவலை ப்ரிபாரிசன் (Preparation) செய்து கொள்வான்.

வழக்கமாக தான் தாங்கும் அந்த த்ரீ ஸ்டார்  ஹோட்டல் பெங்களூர் ரைஸ்கே (Hotel Bangalore Raise) இந்த முறையும் சென்றான். அவன் வந்து விட்டாலே ஹோட்டல் மேனேஜர் அவருடைய வழக்கமான பால்கனிக்கு அருகில் இருக்கும் ரூமை தந்து விடுவார். நந்தா புகை பிடிப்பதற்கும் இரவு தண்ணி அடிப்பதற்கும் சவுகரியமாக இருக்கும். ஆனால் இந்த முறை வேறு ஒருவருக்கு தரபட்டிருந்தது.

கோச்சிக்காதீங்க ஓனரோட பிரண்டு அதான் அந்த ரூம் அவருக்கு தந்துட்டேன் என கன்னட பாசையில் சமாளித்த மேனஜரை முறைத்து கொண்டிருந்தான் நந்தா.

சில மாதங்களாக இந்த ஹோட்டலிலேயே தங்குவது சவுகரியமாக இருந்தது. அருகில் தான் அவனது ஹெட் ஆபிஸ் என்பதால் நடந்தே சென்று விட முடியும். அதற்காக வேறு ஒரு ரூமில் தங்குவதற்கு சம்மதித்தான்.

ஓகே சார். அடுத்த முறை உங்களுக்கு தான் அந்த ரூம் என்றான் மேனஜர்.இப்போ மூணாவது மாடில உங்களுக்கு ரூம் இருக்கு. லிப்ட் இருக்கு... உங்களுக்கு வசதியா இருக்கும்.

ரூம்குள் சென்று ட்ரஸ்ஸை கழட்டி போட்டு விட்டு துண்டை கட்டி கொண்டான். கூலாக தம் அடிக்க தொடங்கினான். அங்குமிங்கும் தம் அடித்து கொண்டே நடந்தான். நீளமான கண்ணாடி ஒன்று இருந்தது. அங்கே சென்று தம் அடித்து கொண்டே தன் முடியை கோதி கொண்டிருந்தான்.

கண்ணாடியின் ஓரத்தில் அந்த சிம்பல். அதே சிம்பல். ட்ரைனில் பார்த்த அதே சிம்பல்.

அட என்பது போல அதை பார்த்தான். இதென்ன குறியீடு!? இதோட விளக்கம் என்ன?! ஒன்றும் புரியவில்லை.

மெதுவாக யோசித்தபடி குளிக்க கிளம்பினான். பாத்ரூம் கதவிலும் அதே சிம்பல். இவன் மூளை முழுவதும் அந்த குறியீடு ஆக்கிரமித்து கொண்டது. இதை பற்றியே யோசனை.

ரூம் பாய் வந்து சார் காப்பி வேணுமா என்றான். வழக்கம்போல சூடாக இருந்த காப்பி ஆரி போனபின் அவன் கைக்கு வந்தது. குடித்துவிட்டு அருகில் இருக்கும் பூங்காக்கு போனான்.

பெங்களூரில் அவன் சில இடங்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளான். அதில் ஒவ்வொரு இடத்தை ஒவ்வொரு தடவை வரும் போது மாற்றி மாற்றி செல்வான்.

இந்த முறை பூங்காக்கு சென்றான்.

ஒரு மூலையில் அமர்ந்து ப்ராஜெக்ட் ப்ராப்ரேசன் செய்து கொண்டிருந்தான். சற்று சலிப்பாகவே மலர் கண்ணாடி கூண்டுக்குள் சென்று அழகழகான மலர்களை போட்டோ எடுத்தான்.

போட்டோக்கள் மிகவும் அழகாக இருந்தது. அந்த கூண்டை சுற்றி வெளியே செல்லும் வழி வரும் பொழுது இடது பக்கம் ஒரு மர பலகையினால் ஆன கதவு ஒன்று பூட்டிய நிலையில் இருந்தது. அந்த கதவுடன் இந்த மலர்கள் இரு புறமும் இருக்க அழகாக இருந்தது. அதனையும் ஒரு கிளிக் செய்து கொண்டான்.

அவன் இருக்கையில் வந்தமர்ந்து அந்த போடோக்களை பார்வையிட்டான். ஜூம் செய்து பார்த்தான். அப்பொழுது தான் கடைசியாக எடுத்த போட்டோவை ஜூம் செய்து பார்த்தபொழுது தெரிந்தது. அதே சிம்பல். ட்ரையின், ரூமின் கண்ணாடி இப்பொழுதும் அதே சிம்பல்.

அதிர்ச்சியில் இருந்தான். சில அம்மானுஷிய கதைகள் நினைவுக்கு வந்தது. இரவில் படுக்கையில் தூக்கம் வரவில்லை.

லாப்டாப் எடுத்தான். அந்த போட்டோவை லாப்டாப்பில் ஏற்றி அந்த சிம்பலை கிராப் செய்து அந்த இமேஜை கூகிள் இமேஜ் சர்ச்சில் அப்லோட் செய்தான். அதற்க்கு ஒத்துப்போன படிமங்கள்(image) வந்தது. அதில் சில அந்த சிம்பலாக இருந்தது. ஒவ்வொரு லிங்கயும் கிளிக் செய்து படித்து பார்த்தான்.

1987லில் பெங்களூரை அச்சுறுத்தியது மிக பெரிய கிரைம் அந்த மர்ம மனிதனால் நடத்தபடும் தொடர் கொலைகள் தான். அவன் ஆட்களை கொலை செய்து விட்டு கை, கால்கள், தலைகளை தனித்தனியே வெட்டி அவன் கொண்டு வந்த மூட்டை பைக்குள் போட்டு கொண்டு சென்று விடுவான்.

அந்த கொலையாளியின் சிறு துப்பு கூட இது வரை போலிஸ்க்கு கிடைக்கவில்லை.

அவன் அங்கு வந்து சென்றதற்கான ஒரு அடையாளமாகவே அந்த குறியீடை வரைந்து வைப்பான். அதை தவிர அவனுடைய தகவல் எதுவும் தெரியாது.

அப்படியானால் இங்கே ஏன் இரண்டு சிம்பல் இருக்கிறது என யோசித்தான்!

இவ்வாறு அன்றைய தினங்களில் வந்த செய்தி தாள்களை ஸ்கேன் செய்து பல்வேறு ப்ளாக்குகள் எழுதபட்டிருந்தது.

மேலும் அதனை பற்றிய விவரங்களை தேடும் பொழுது அவன் ஒரு நரமாமிச உண்ணியாக (hannibalism) இருப்பான். நரமாமிச உண்ணிகள் நாகரீகம் வளராத கால கட்டங்களில் பலர் பல்வேறு பகுதிகளில் இருந்துள்ளனர். இன்றைய நாகரீக காலங்களில் கண்ணிற்கு தெரியாமல் சிலர் உலாவி கொண்டுள்ளனர். அப்படிபட்ட மனிதனாகவே அந்த பெங்களூர் கொலைகாரன் இருப்பதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது.

இதயெல்லாம் படித்த பிறகு அவனுக்கு தூக்கம் அறவே இல்லாமல் போனது. தன்னுடைய ப்ராஜக்டிலும் கவனம் செலுத்த இயலவில்லை. மறுநாள் காலை ப்ராஜெக்ட் ஐ விவரிக்க வேண்டும். மனதில் குழப்பங்கள் அதிகமாகின.

மறுநாள் காலை அவனுக்கு போன் வந்தது.

நான் தான் ஜி எம் (General Manager) பேசுறேன்.

சொல்லுங்க சார்.

கிளம்பியாச்சா?

எஸ் சார் கிளம்ப போறேன்.

ஹ்ம்ம்... பட் கிளையண்ட்ஸ் வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம். இப்போ தான் நியூஸ் வந்துச்சு.

ஒ...

நீங்க அங்கேயே இருங்க. டூ டேஸ் வெயிட் பண்ணுங்க. போன வேலைய முடிச்சிட்டு கிளம்பி வாங்க. ஓகே?

ஓகே சார் சுயூர்....!

ஓகே பாய்.

போனை வைத்த உடன் அந்த கண்ணாடியை பார்த்தான்.

மனதில் இருந்து அழுகை குமுறி கொண்டு வந்ததை அடக்கி கொண்டான்.

எரிச்சலாக இருந்தது.

ரூம் கொஞ்சம் சரி இல்ல. வேற ரூம் கிடைக்குமா என ஹோட்டல் ரிசப்சனில் கேட்டான்.



சாரி சார். எல்லா ரூம் புல் அண்ட் புக்குடு (Full and Booked). ரூம் ப்ரீயா இருந்தா நாங்களே கால் பண்றோம். இப்போ உங்களுக்கு ரூம்ல எதுவும் பிரச்சனையா இருந்தா வந்து சரி பண்ணி கொடுக்குறோம்.

சிறுது நேரம் யோசித்தான். ஓகே நான் ரூம் போய் கால் பண்றேன்னு. ரூம்க்கு கிளம்பினான்.

லிப்ட் மூன்றாவது மாடியில் சென்று நின்றது. கதவு திறக்கும் பொழுது ஒரு முதியவர் கிராஸ் ஆனார்.

இவன் வெளியே வந்து தன்னுடைய ரூம் அருகில் சென்று கதவை திறக்க சாவியை எடுக்கும் வேலையில் எதேர்ச்சையாக திரும்ப அந்த முதியவர் சுவற்றில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தார்.

ரூம் திறப்பதை நிறுத்திவிட்டு. அய்யா கொஞ்சம் நில்லுங்க. நான் உங்க கிட்ட பேசணும்.

அந்த கிழவன் கவனிக்காமல் சுவற்றை கிறுக்கி கொண்டிருந்தான்.

மீண்டும் பேசி கொண்டே நந்தா அவனருகில் சென்றான்.

அவன் எதையும் கண்டு கொள்ளவே இல்லை.

அருகில் சென்றான். அந்த கிழவரின் இடப்பக்கம் நந்தா நின்றிருந்தான்.

நான் உங்க கிட்ட பேசணும் என்று மென்மையான குரலில் சொன்னான்.

அதை கேட்ட முதியவர் மெதுவாக திரும்பினார். என்ன பேசணும்?!

அப்பொழுதான் முதியவரை முழுசாக கவனித்தார். கையில் ப்ரஷ். இன்னொரு கையில் பெயிண்ட். த்ரீ ஸ்டார் ஹோட்டல் என்பதால் சுவற்றில் சிறு கீறல்கள் கூட விட்டு வைப்பதில்லை அந்த நிறுவனம். அதை தான் அந்த முதியவர் சரி செய்து கொண்டிருந்தார்.

ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல... என்ற படி பின்னோக்கி வந்தான் நந்தா. சென்று ரூமில் படுத்து கொண்டான்.

குழப்பம் தலைகேறியது. அவனது பணிகள் பாதிக்கபட்டது. குறியீடுகள் உறுத்தி கொண்டே இருந்தன. இந்த சிம்பல் ஏன் நம்மை பின் தொடருகிறது என கொஞ்சம் விரக்தியிலும் இருந்தான்.

பெர்முடா முக்கோணம் போல இந்த முக்கோணமும் மர்மமாக இருக்கிறதே என குழம்பினான்.

டக்கென்று லாப்டாப்பை மூடி வைத்தான்.

வெளியே வந்தான்.

ரூம் பாய் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவனை அழைத்து இந்த ரூம்ல எதுவும் மர்டர் நடந்திருக்கா என கேட்டு கொண்டே ஒரு நூறு ரூபாயை அவன் கையில் திணித்தான்.

இந்த கேள்வியை எதிர்பார்க்காத ரூம் பாய் பதில் சொல்ல திணறினான்.

சும்மா பயபடமா சொல்லு.

நான் சின்ன சின்ன ஹோட்டல் இருந்து வேலை பாத்து வேலை பாத்து தான் இந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு வேலைக்கு வந்திருக்கேன். என்னோட அனுபவத்துல ரெண்டு தடவை இந்த மாதிரி கொலைகள் நடந்திருக்கு. அப்புறம் பிராத்தலும். என்ன கேட்டா எல்லா ஹோட்டல்லையும் இந்த மாதிரி விபரீதங்கள் நடக்குறதிள்ள....

ஹேய்! ஹேய்! நான் கேட்டது இந்த ரூம்ல.

இல்ல சார். எனக்கு தெரிஞ்சி இல்ல.

சரி, இந்த ஹோட்டல் எத்தன வருஷமா இருக்கு?

இந்த ஹோட்டல் ஆரம்பிச்சு நாலு வருஷம் தான் ஆகுது.

ஆனா உள்ள பழைய காலத்து கதவெல்லாம் இருக்கு. தேக்குல செஞ்சது. பாத்ரூம் டோர்!

ஒரு ஹோட்டல்ன்னு ஆரம்பிச்சா எல்லாமே புதுசு வாங்குறதில்ல சார்.

அப்படியானால் இங்கே ஒரு கொலை மட்டும் தான்  நடந்திருக்கு. பாத்ரூம் கதவு வேறு எங்கோ இருந்து கொண்டு வரபட்டிருக்கு என யூகித்தான்

ஹ்ம்ம் ஓகே... என சொல்லிவிட்டு நேராக கீழே சென்றான்.

ரிசப்சனில் சொல்லி மேனஜரை அணுகினான்.

சொல்லுங்க நந்தா ரூம்ல எதுவும் பிரச்சனையா?.

அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு ஒரு விவரம் தெரியனும். பெங்களூர்ல ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். உங்களோட ரூம்ல தேக்குல செஞ்ச கதவு எல்லாம் பார்த்தேன். அது ரொம்ப காஸ்ட்லி. எப்படியும் புதிசா கிடைக்குறது வாய்ப்பில்ல. நீங்க எங்க வாங்குனீங்கன்னு சொன்னீங்கன்னா... எனக்கு தேவையான பர்னிச்சர் (furniture) அங்கேயே போய் வாங்கலாம்ன்னு இருக்கேன்.

இல்ல சார் அதெல்லாம் புதுசு.

சாரி சார். எனக்கு அது பழசுன்னு தெரியும். சும்மா சொல்லுங்க.

சில விவாதத்திற்கு பின்னர். 

அட்ரஸ் கொடுத்தார் மேனஜர்.

நேராக அந்த பழைய பொருட்கள் கடைக்கு சென்றான்.

தன் மொபைலில் போட்டோ எடுத்து வைத்திருந்த அந்த ரூமின் கதவை காண்பித்தான்.

குறிப்பா இந்த கதவு எங்க இருந்து வந்ததுன்னு கேட்டா சொல்ல முடியாது சார். இங்க பாருங்க மலை போல குவிஞ்சிருக்கு நிறைய சாமான்கள். இது எல்லாம் எங்கிருந்து வந்ததுன்னு கேட்டா கண்டிப்பா தெரியாது சார்.

அது வேலைக்கு ஆகாது என தெரிந்தது.அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்த நாள் காலை ஒரு டீ கடையில் நின்று நியூஸ் பேப்பரை படித்து கொண்டிருந்தவனுக்கு ஷாக்!

மாலை பொழுது ஆகி விட்டது. இதே குழப்பத்தில் ப்ராஜெக்ட் பற்றி மறந்தே போய் விட்டான்.

அவசரவசரமாக ப்ராஜெக்ட் வேலைகளை முடித்தான்.

அன்றைய பொழுது முழுவதும். குழப்பம், பதட்டம், பயம் கலந்தே இருந்தது. குறியீடு விஷயம் மூளையை போட்டு குடைந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை. 

ஒரு வழியாக பல தடுமாற்றங்கள், உளறல்களாக ப்ராஜெக்ட் விளக்கம் முடிவடைந்தது.

ஹெட் ஆபிசில் வேலை பார்க்கும் நந்தாவின் நண்பர் சதீஷுடன் இரவில் ரூமில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தான் நந்தா.

ப்ராஜெக்ட் ஒரு வழியா சக்சஸ் ஆச்சு டா. ஆனா நீ ஏன் இவ்ளோ தடுமாருனன்னு தெரியவே இல்ல என கேட்டான் சதீஷ்.

சதீஷ், ஒரு விஷயம் சொல்றேன் என்று லாப்டாப்பை ஆன் செய்தான்.

அவன் கண்ட அந்த குறியீடு பற்றி விளக்கினான். அவன் சேகரித்து வைத்த ப்ளாக் நியூசை அவனிடம் காட்டினான்.

சதீஷ் எந்த வித ரியாக்சனும் இன்றி அவனை பார்த்தான். ஏண்டா டேய் அவனவனுக்கு எவ்வளவு பிரச்னை இருக்கு. இதெல்லாம் ஒரு விசயம்ன்னு நீ அனலைஸ் பண்ணி கிட்டு இருக்க. இதெல்லாம் மூடி வை. அந்த லாப்டாப் கொடு. 87 ல நடந்தத இப்போ புரட்டி பார்த்துகிட்டு...

இல்ல மச்சி. 87 ல மட்டும் நடக்கல! என்றான் நந்தா.

என்ன சொல்ற?!

இருபத்தி அஞ்சி வருஷம் அப்புறம் ரெண்டு நாள் முன்னாடி தொடர்ந்து மூணு கொலை நடந்திருக்கு சென்னைல. அதுவும் இதே சிம்பல், இதே பாணி. கொலை பண்ணது அப்புறம் கொலை பண்ண பாடியை தூக்கிட்டு போயிடுறான். இங்க பாரு இந்த நியுஸ் பேப்பர் நேத்தோடது என்று சொல்லி சதீஷிடம் கொடுத்தான் நந்தா.

அவன் படித்து பார்த்தான்.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு பிறகு. பெங்களூர் கொலைகாரனின் வெறியாட்டம் என்று தலைப்பிருந்தது. மேலும் வாசித்தான்.

பெங்களூரில் நடந்த கொலைகளோடு சென்னையில் நடந்த அந்த மூன்று கொலைகளும் ஒத்து போய் இருந்தது. அதே குறியீடு. அங்கயும் இருந்தது.

இங்க பாரு நந்தா. இதெல்லாம் படிச்சிட்டு குழப்பி கிட்டு இருக்காத. இதுக்கும் உனக்கு சம்மந்தமே இல்ல. நீ இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பு. போய் வைப் கூட சந்தோசமா இரு. உன் பொண்ணு கூட ரிலாக்ஸ் பண்ணு என்று சொல்லி கொண்டே லாப்டாப்பில் உள்ள அந்த இமேஜ்களை டெலிட் செய்தான்.

டேய் சதீஷ். எனக்கு ப்ளைட் புக் பண்ணு. ட்ரையின் வேணாம். திரும்பவும் அதே நியாபகம் வரும்.

இல்ல நந்தா. இப்போ ப்ளைட் இருக்கா இல்லாயான்னு தெரியல.

இல்ல டா கொஞ்சம் பாரு...

ப்ளைட் ஏறி சென்னை ஏர்போர்ட் வந்து அங்கிருந்து டாக்ஸி மூலம் தன்னுடைய அப்பார்ட்மெண்ட்டில் வந்து சேர்ந்தான்.

எட்டாவது ப்ளோரில் இருக்கும் தன்னுடைய பிளாட்டுக்கு லிப்ட் மூலம் சென்றான்.

எட்டாவது ப்ளோரில் நடந்து கொண்டே மனைவிக்கு கால் செய்தான். அவள் எடுக்கவில்லை.

அவன் பிளாட் அருகில் வந்துவிட்டான். மனைவி போன் எடுக்காததால் தன்னிடம் உள்ள சாவியை எடுத்து டோரில் சொருகினான். சொருகிக்கொண்டே கதவை கவனிக்கும் பொழுது திடுக்கிட்டான். அந்த கதவில் அதே குறியீடு.

அவசரவசரமாக கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தான்.

பெட், தரை, திரை சீலை, சேர் அனைத்திலும் ரத்தம் தெறித்திருந்தது.

தலையில் கையை வைத்த வாரே திகைத்த படி பின்னாடியே நகர்ந்து சென்றான். அங்கிருந்த ஜன்னலில் சாய்ந்த படி அழ தொடங்கினான்.

அவன் கீழ் முதுகில் எதோ உறுத்தியது.

மெதுவாய் திரும்பி பார்த்தான்.

கொக்கி. அந்த கொக்கியில் இருந்து கயிறு.

ஜன்னல் வழியே எட்டி பார்த்தான். கயிற்றை பிடித்து இறங்கி கொண்டிருந்தான் அந்த பெங்களூர் கொலைகாரன். எல்லாமே தற்போது தான் நடந்து முடிந்திருக்கிறது என்பதை உணர்ந்தான் நந்தா.

கொலைகாரன் இறங்கி கொண்டிருப்பது அப்பார்ட்மெண்டின் பின்புறம். அவன் முகம் தெரியாமல் இருக்க குல்லாய் ஒன்றை அணிந்து கருப்பு கண்ணாடி போட்டிருந்தான்.

நந்தா வேகமாக படியிறங்கி ஓடி வந்தான்.

கொலைகாரன் இறங்கி முடித்து தன் பைக்கை நோக்கி ஓடி கொண்டிருந்தான்.

தன் பைக்கில் ஏறி அமர்ந்த கொலைகாரன் விர்ரென கிளம்பினான்.

அந்த அப்பார்ட்மெண்ட் முடியுமிடத்தில் இடது புறம் திரும்பும் நேரத்தில் நந்தா வேகமாக ஓடி வந்து அவன் மேல் பாய்ந்தான்.

கொலைகாரன் கத்தியை எடுத்து நந்தாவை பலமாக வயிற்றில் நாலு முறை குத்தினான்.

நந்தா விடவில்லை. ஆனால் பலம் இழந்திருந்தான்.

கொலைகாரன் நந்தாவின் பிடியில் இருந்து ஓட. நந்தா அவனது பின் புறம் அணிதிருக்கும் பையை பிடித்து இழுக்க பை கிழிந்தது.

நந்தா கிழே விழ அவன் கண் முன் பையில் (Bag) இருந்து ஒரு பெண்ணுடைய தலை உருண்டு வந்து அவனை பார்த்தது.

நந்தா அலறினான். ஒரு பக்கம் நிம்மதி. அந்த தலை அவன் மனைவியுடையது இல்லை. அவன் வீட்டு வேலைகாரி.

கொலைகாரன் தலையை எடுக்க வந்தான்.

நந்தா அந்த தலையின் முடியை இறுக்கமாக பிடித்து கொண்டான்.

கொலைகாரனுக்கு. தலையை விட மனமில்லை.

கடைசியாக பிடுங்கி கொண்டான்.

கொஞ்ச தூரம் ஓடி கொலைகாரன் நின்றான்.

இருவரும் இளைப்பாறினார்.

மெதுவாக கொலைகாரன் அடி எடுத்து வைத்தான்.

நந்தா ஒரே மூச்சில் ஓடி அவன் மேல் சென்று விழுந்து விட்டான்.

கொலைகாரனால் போராட முடியவில்லை.

நாலு முறை கையால் முகத்தில் குத்து விட்டான் நந்தா. பிறகு குல்லாயை கழட்டினான்.

வயதான மனிதன். நரைத்து போன முடி.முகம் முழுவதும் வெள்ளை நிற தாடி. எங்கோ பார்த்ததை போன்ற நினைவு.


அந்நேரம் அந்த பகுதியில் ரோந்து போலிஸ் ஜீப் வந்தது....

ஒரு வாரம் பிறகு.

இவன் கொலைகாரனை பிடித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும், இணையத்திலும் காட்டு தீ போல பரவி கொண்டிருந்தது.பாரட்டுக்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன

நந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தான். அங்கே அவன் மனைவியும், மகளும் உடன் இருந்தனர்.

நீங்க அன்னைக்கு உன் அம்மா வீட்டுக்கு போய்ட்ட. ஆனா அந்த வேலைகாரி தான் பாவம். முப்பத்தி அஞ்சி வயசு ஆகியும் கல்யாணம் கூட ஆகல என்று வருத்தபட்டான்.

நீங்க தான் அடுத்த நாள் காலைல வர்றதா சொன்னீங்க. அதனால தான் நாங்க வேற மாதிரி பிளான் பண்ணி வெளியே போனோம். இப்படி எல்லாம் நடக்கும்ன்னு யார் கண்டா! ஆனா தொடர்ச்சியா உங்களுக்கு மட்டும் அந்த சிம்பல் பாலோவ் பண்ணி கிட்டு இருந்தது நீங்க அந்த பெங்களூர்காரண பிடிக்கிறதுக்கு தான் கடவுள் செஞ்சி வச்ச வேலை தான் என்னவோ.

நந்தாவுக்கு சிறுது கோபம் வந்தது. உனக்கு வேற வேலை இல்ல. எதையாவது நீயே நினைச்சிக்குறது.

சரி சரி விடுங்க...

சிறுது நேரம் கழித்து... ஆனா அந்த கொலைகாரன நான் வேற எங்கயோ பார்த்தேன். அது தான் நினைவுக்கு வர மாட்டேங்குது என்றான்.

ஏங்க சும்மா சும்மா அதையே போட்டு குழப்பி கிட்டு இருக்கீங்க?! என அவன் மனைவி கேட்டு கொண்டிருந்த நேரத்தில்... அவன் இருக்கும் ரூமின் வாசலில் அழிந்து போன கதவு எண்ணை பெயிண்டில் எழுதுவதற்கு ப்ரஷ்ம் கையுமாக ஒருவன் வந்து நின்றதும் நந்தாவிற்கு கொலைகாரனை கண்ட இடம் நினைவுக்கு வந்தது.

- திவான். 

ஒரு காருக்குள்ளே பத்து பேரு (சிறுகதை)

மலை உச்சியில் இருந்து ஆற்றில் குதிப்பது, நிறைய நேரம் தம் கட்டி தண்ணிகுள் இருப்பது, விஷம் குடித்து முடிந்த வரை தாக்குபிடிப்பது, எண்ணற்ற  தூக்க மாத்திரைகளை உண்டு தூங்காமல் இருப்பது என பல சோதனையில் இறங்கி பார்த்தாகிவிட்டது. ஆனால் அவனுடைய வேட்க்கை தணியவில்லை.

அவன் தங்கி இருக்கும் அறையில் ஒரு நாள் அவன் காணவில்லை. ஏதோ ஒரு திரைப்படத்தில் சவ பெட்டிக்குள்ளிருந்து சவபெட்டியை உடைத்து மண்ணிலிருந்து வெளிவந்ததை கண்டு அவனுக்கு பிடித்து போனது. அதனையே அவனும் செய்ய துணிந்தான். ஆனால் சவபெட்டியை தன் கையாலேயே உடைத்து காட்டும் அந்த ஹீரோ பெட்டி உடைந்த உடன் மேலே உள்ள மண் சவபெட்டிகுள் வந்து விடும். அதிலிருந்து எப்படி வெளி வருவது என காட்டப்படவில்லை.

ஆனால் ராய்ஸ்டன், மணல் தன் மேல் மூடப்பட்டதையும் மூச்சை கட்டி கொண்டு மேலெழுந்து வந்தான்.

அவனுக்கு மனநோய் எதுவுமில்லை. அது அவனது ஏக்கம். தீராத வேட்கை.

அந்த கார் விற்கபடாமாலையே இருந்தது. சிலர் காரை வாங்கி கொண்டனர். ஆனால் வாங்கியவனிடமே மீண்டும் கொடுத்து சென்றனர்.



ஏனென்றால் அந்த காரில் பேய்கள் இருப்பதாக கார் ஓட்டியவர்கள் உணர்ந்தனர்.

சிலர் கார் கண்டிசன் சரி இல்லை என்றனர். சிலர் பேய் இருக்கு என்றனர். சிலர் ஒன்னு இல்ல நிறைய இருக்கு என்றனர். ஆனால் கார் தற்போது வைத்திருக்கும் சதாசிவனுக்கு தெரியும் காரில் மொத்தம் தன் மகனோடு சேர்த்து பத்து பேய்கள் இருக்கிறது என்று.

தன் மகனும் அவரிடம் சொல்லி கொண்டுதான் இருந்தான். மொத்தம் எட்டு பேய்கள் இருப்பதாக உணர்கிறேன் என்று.

பேயே இல்லன்றேன் அதுல கரக்ட்டா ஒன்பது பேயாம் என்று சதாசிவம் அதை தட்டி கழித்தார். பிறகு தன் மகன் அவன் நண்பனோடு விபத்தில் இறந்த பிறகு ஒரு நாள் அந்த காரை ஓட்டி பார்த்த பிறகே காரில் பேய் இருப்பதை உணர்ந்தார்.

கார் அவர் கட்டுபாட்டில் இல்லை. அதுவாகவே திரும்புகிறது, கியர் மாற்றபடுகிறது. நின்று கொள்கிறது. பெட்ரோல் தீருவதாக இருந்தால் பெட்ரோல் பங்கை நோக்கி செல்கின்றது. ட்ராபிக்கில் விடாமல் ஹாரன் அடிக்கிறது. யாருனும் முறைத்தால் அவனை மாட்டி விட்டுவிட்டு காணமல் போய் விடுகிறது.

எந்நேரமும் காரில் பேச்சு சத்தம். அதில் ஒரு தம்பதியின் சண்டை ஓயாமல் ஒளித்து கொண்டிருக்கும். அதிலே இன்னொரு தம்பதியின் ரொமான்ஸ் தாங்காது. முத்தம் சத்தம், இச்சை சத்தம் கார் நாம் ஓட்டினால் கூட கட்டுபாட்டை இழந்து விடும். அந்த ரொமான்ஸ் தம்பதியில் புருசனுக்கு சின்ன வீடு ஒன்னு இருக்கு. அதுலயும் அந்த காருக்குல்லையே இருக்கு. அது எப்போதுமே தனிய புலம்பி கொண்டிருக்கும். நான் மட்டும் அன்னைக்கு இந்த காருல ஏறலன்ன இந்நேரம் வேற எவனையாவது கரக்ட் பண்ணிட்டு போய் இருப்பேன். இப்போ ஆவியா ஆகி இப்படி புலம்ப விட்டுட்டானே இந்த பாவி என்று புலம்பி தள்ளி விடுவாள்.

இந்த பிரேக் அமுக்குவது, ஸ்டேரிங் திருப்புவது, ட்ராபிக்கில் விடாமல் ஹாரன் அடிப்பது போன்ற வேலைகளை சண்டை போடும் தம்பதிகளின் மூன்று வாண்டுகள் இருக்கிறார்கள் அவர்கள் அதை பார்த்து கொள்வார்கள்.

சண்டை போடும் தம்பதி, ரொமான்ஸ் தம்பதி, சின்ன வீடு மற்றும் அந்த மூன்று வாண்டுகள் போக நட்பின் இலக்கணமாக திகழும் இரண்டு நண்பர்களும் அந்த பத்தில் அடக்கம். அந்த நண்பர்களில் ஒருவன் தான் சதாசிவதினுடைய மகன்.

இந்த காரை எப்படியாவது விற்று விட வேண்டுமென்று பல முயற்சிகள் எடுத்திருந்தார் சதா சிவம். இறுதியாக தன் நெருங்கிய நண்பனிடம் இதை பற்றி சொல்ல அவன் ஒரு யோசனை கொடுத்தான். பேய் இருக்குறத மறச்சி வித்தா இன்னக்கி இல்லனாலும் என்னைக்காவது உனக்கு பிரச்னை வரும். பேய் இருக்குன்னே சொல்லி வித்துடு என்பது தான் அவர் நண்பரின் ஆலோசனை.

அதன் படி தின இதழ் ஒன்றில் இவ்வாறு விளம்பரம் செய்தார்.

ஒன்றல்ல பத்து பேய்கள் உலாவும் கார்.

இதுவரை பங்களாவை தான் அவ்வாறு கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் இது கார். என்று பல வார்த்தை ஜாலங்களோடு அந்த விளம்பரம் இருந்தது.

அந்த விளம்பரம் படித்து நியூஸ் பேப்பரை கிழே வைத்தான் ராய்ஸ்டன்.

இந்த காரை வாங்கவேண்டுமென அவனது மனதுக்குள் முடிவானது.

காரோட விலை இது தாங்க. ஆனா கார் வங்கிக்கனும்ன்னா இந்த ஒப்பந்தத்துல ஒரு சைன் மட்டும் போட்டிடுங்க என்றார் சதாசிவம்.

எல்லா விசயமும் தெரிஞ்சி தான் இந்த கார் வாங்குறேன். ஒரு ப்ளாங் பேப்பர் கொடுங்க அதுல கூட சைன் பண்ணி தரேன் என்றான் ராய்ஸ்டன்.




காரை வாங்கினான்.

காரை ஏதோ ஒரு பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்தான் ராய்ஸ்டன்.

ஒரு மணி நேரம் வரை காரில் எவ்வித சலனுமும் இல்லை.

காரை ஸ்டார்ட் செய்தான்.

டக்கென ஆப் ஆனது.

இப்போ தான் உங்க வேலை காட்டனும்ன்னு தோனிச்சா? ஏன் என்னை எல்லாம் பார்த்தா உங்களுக்கு மனுஷனா தெரியல? நான் பயபடமட்டேன்னு நினச்சிடீன்களா? என்று சொல்லி முடிக்க தான் தாமதம். கார் ஸ்டார்ட் ஆகி சர் என்று சிறுது தூரம் நகர்ந்து மீண்டும் ஆப் ஆகி நின்றது.

ராய்ஸ்டன் அதை எதிர்பார்க்கவில்லை. அதை வெளிகாட்டி கொள்ளாமல். சோ, இவ்வளவு தான் நீங்க இல்ல??!!! சாரி சாரி...!!!! உங்க கிட்ட ரொம்ப எதிர் பார்த்துட்டேன் என்று அவர்கள் மேல் வருத்தபட்டான்.

கார் ஸ்டார்ட் ஆனது பாலத்தின் கீழ் இருந்து சாலைக்கு வந்தது. வேகமாக சீறி பாய்ந்தது. காரில் சவுண்ட் சிஸ்டம் ஆன் ஆனது.

ராய்ஸ்டன் அந்த வேகத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.

கார் வேகத்தின் கட்டுபாட்டை கடந்தது. நடுவில் எங்கோ செக் போஸ்ட் வர அதை இடுத்து தள்ளி பறந்தது. 

அந்த காரை போலிஸ் கார்கள் துரத்த தொடங்கினர்.

கார் நிற்காமல் விர்ரென்று பறந்தது.

போலிஸ் அடுத்ததடுத்த செக் போஸ்டில் அறிவித்தனர். அந்த செக் போஸ்ட்டையும் கடந்து சென்றது அந்த பேய் கார்.

ராய்ஸ்டன் எதையுமே கண்டுகொள்ளவில்லை. அந்த வேகத்தை அனுபவித்தான்.

அதெல்லாம் சரி அந்த  பாட்ட அமத்தி தொல சனியனே.

சவுண்ட் சிஸ்டம் திடிரென ஆப் ஆனது.

என்ன எதுக்கு திட்றீங்க. சும்மா சும்மா என்னையவே கேக்காதிங்க உங்க மூணு பசங்க செய்யுற சேட்டைய பாருங்க. அடங்குரான்களா இவனுங்க. அவனுக தான் இந்த டேப் ஆன் பண்ணது.

டேய் மெதுவா போங்கடா ஏன் பறக்குறீங்க.

சும்மா இருங்க டாடி கார் ஒட்டி கிட்டு இருக்கோம்ல. அப்புறம் அந்த ஆண்டி கிட்ட சொல்லிடுவேன்.

எந்த ஆண்டி கிட்ட டா?

அதான் ஓரமா உக்காந்து புலம்பிகிட்டே இருக்குமே.

அந்த சின்ன வீட்டை அவன் பார்த்து வழிந்தான்.

அங்க என்ன பார்வை?! கண்ண நோண்டி  புடுவேன் நோண்டி. அடியே இங்க என்ன பார்வை?

ஏ என்னா! எப்போ பாத்தாலும் ஓவரா போற? அடிங்ங்ங்ககக!!! என்ன பார்த்தா எப்படி தெரியுது?!

அந்த இச்சை சத்தமும் உடன் ஆரம்பித்தது. ஹலோ அங்கிட்டு ஓரமா போய் சண்ட போடுங்க. ரொமான்ஸ் மூட கெடுக்காதிங்க.

கருமம் கருமம் இருபத்தி நாலு மணி நேரமும் எப்படி தான் கொஞ்சி கொளவுரானுகளோ. ஏ நீ அவனோட சின்ன வீடு தான?! அவன் உன்ன கண்டுக்கததால என் புருஷன் மேல பார்வை போடுறயா?

அம்மா சும்மா கத்தி கிட்டே கிடக்காத இப்போ தான் சூப்பர் சீன் வர போகுது என்றனர் அந்த வாண்டுகள்.

என்ன நடக்கபோகிறது என்பதை ராய்ஸ்டனால் யூகிக்க முடியவில்லை.

வழக்கம் போல பிரச்சனை உச்சகட்டம் எட்டியவுடன் ராய்ஸ்டனை மாட்டி விட சடாரென வேகத்தை குறைத்து பிரேக் அமுக்கினர் அந்த வாண்டுகள்.

ராய்ஸ்டன் பதறி போனான். டேய் பிசாசுங்களா என்ன பண்ணி தொலைக்குறீங்க?!

டேய் முண்டம் எங்கள அப்படி கேள்வி கேட்ட! நாங்க யாருன்னு காமிச்சோட்டோம். நீ யாருன்னு காமி என்றனர்.



ராய்ஸ்டன் காரை இயக்க தொடங்கினான். போலிஸ் கார்கள் அவனை நெருங்கி விட்டன. இருபுறமும் வந்த கார்களை இடுத்து கொண்டு முன்னேறி சென்றான்.

போலிஸ் கார்கள் சேதமாகவே கார்கள் நின்றன.

ஏதோ ஒரு காட்டுக்குள் புகுந்தது அந்த கார்.

மீண்டும் காரை அந்த வாண்டுகள் இயக்க தொடங்கினர்.

மலை பாதை வந்தது.

அதிலும் வேகமெடுத்து சென்றது கார்.

மீண்டும் பழைய நிலையிலே ராய்ஸ்டன் ரசிக்க தொடங்கினான்.

ஆனால் அந்த வேகம் அலுத்து போனது. டேய் லூசுங்கள இது போர் அடிக்குது வேற ஏதாவது பண்ணுங்க.

வாண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

டேய் லூசு முண்டம் ஸ்பீட் இவ்வளவு தான் இருக்கு. இதுக்கு மேலே ஸ்பீடா போக முடியாது. இதுக்கு மேலே ஸ்பீடா போக முடிந்தாலும் போக மாட்டோம். ஏன்னா ஏற்கனவே ஆக்சிடண்ட் ஆகி தான் நாங்க எல்லாரும் செத்துட்டோம். திரும்ப அப்படி ஆகிடோமொன்னு எங்களுக்கெல்லாம் பயம் என்றவுடன் அப்போ அதுல தானே இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லி ஸ்டேரிங்கை இடது புறம் திருப்பினான்.

தடுப்பை பெயர்த்து கொண்டு கார் ஜிவ்வென்று பறந்தது.

அதில் உள்ள பேய்கள் பயந்து பீதியில் காரை விட்டு ஒவ்வொன்றாக வெளியே குதித்தது.

கடைசியாக அந்த வாண்டுகள் நாங்க தான் சொன்னோம்ல ஏண்டா இப்படி பண்ண?! என்று சொல்லி விட்டு அதுகளும் குதிக்கவே கார் தாறுமாறாக எங்கோ காட்டுக்குள் ஒரு மரத்தின் மேலே மோதி நின்றது.

கடைசியாக கட்டி பின்னி இருந்த அந்த இரண்டு இணை பிரியாத நண்பர்களும் வெளியேறினர்.

காரில் ஒரு சலனுமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.


-திவான்

பச்சோந்தி (சிறுகதை)


சிக்னலையும் மதிக்காமல் ரோட்டை கடந்து இரு வாகனங்களையும் லேசாக முட்டி தள்ளி விட்டு ரோட்டோரமாய் இருந்த பிளாட்பாரத்தில் மாருதி 800 முட்டி நின்றது. அங்கிருந்த நடைபாதை கடைகள் நாசமாகின.

அங்கிருந்த ட்ராபிக் இன்ஸ்பெக்டர் நீதிதேவன் மற்றும் முத்துராம், வாகனம்பிள்ளை என்ற இரு ட்ராபிக் கான்ஸ்டபில்கள் வேகமாக கார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

யோவ் என்னையா இது புதுவண்டியாட்டம்ல தெரியுது நம்பர் பாருவே என்றார் நீதி.


சார் ரிஜிஸ்ட்ரேசன் கூட பன்னல சார் இது கான்ஸ்டபில் முத்துராம்.

நீதி: யோவ் யாருலே. கார விட்டு எறங்கு.

காரில் இருந்த டிரைவர் மெதுவாக கீழ் இறங்கினான்.

நீதி: சிக்னல கூட மதிக்காம இவ்வளவு வேமா எங்கள்ள போற? ஓ பேருன்ன?

சத்யன்யா என்றான்.

அங்கிருந்த நடைபாதை வியாபாரிகள் அதிகாரியிடம் புலம்ப ஆரம்பித்தனர்.

வியாபாரி முத்தம்மாள்: அய்யா இங்க பாருங்கோ. எம்புட்டு காய்கறிக நாசாமா போவிடுத்து. விடாதிங்க அய்யா அடிங்க. இப்படியா வண்டி ஒட்டி வரவா? விடாதிங்கயா.

நீதி: இருமா பேசுறேன்ல. பைன் போடுல. ஜீப்ப கொண்டா. ஏத்துல வண்டியல...

சத்யன்: சார் சார் தெரியாம பண்ணிட்டேன். சாரி சார்.

வாகனம்: சார் செத்த இங்குட்டு வாங்க.

நீதி: என்னயா?

வாகனம்: இதே காரு தான் சார். இதே காரு தான். நேத்து கமிசனர் ஐயா வீட்டுல பாத்தே. நீங்க பாட்டுக்கே பைன் எதுவும் போட்டு விட்டுடாதிங்கே. இந்த பையன பாத்தாக்க அங்கிருந்த டிரைவர் மாதிரியே இருக்காப்புல..

நீதி: என்னாயா சொல்ற?!

வாகனம்: அட ஆமாயா!

நீதிதேவன் தொப்பியை கழட்டி காரின் மீது வைத்தான்... தொப்பியில் இருந்த சிங்கமோ சப்பென்று மங்கலாக தெரிந்தது.

நீதி: எவ்வளவு வெயிலு கொஞ்சநெஞ்சமாவா வெயிலடிக்குது. சூ... ப்பா...

ஏலே கெழவி பிளாட்பாரத்துல கடைய விரிக்காதன்னு எத்தன தடவ சொல்லிர்க்கே. ஒரு மொரயாவது கேட்ருக்கியாலே இதுல இவங்கள வேற அடிக்க சொல்லுதுவே. யோவ் முத்துராமு கொண்டாயா பேப்பர... எழுதுயா இந்தம்மா பேர... எழுதி பைன் போடு. யாருயா நீ ஓ பேரு என்ன எல்லார் பேரையும் எழுது... ஒருத்தனையும் விடாதே.

இவ்வாறு கூறியவுடன் அங்கிருந்த வியாபாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். கிரகபுடிச்ச பயவுள்ள தினைக்கும் வந்து காசுவாங்கிட்டு நம்ம மேலே பைன் போடுதாமுள்ள பைனு என்று மனதில் நினைத்து கொண்டாள் வியாபாரி முத்தம்மாள்.

முத்துராம்: சார் என்ன சார் இடிச்சவன விட்டுபுட்டு இடிவாங்குனவங்கள புடிக்குரிங்க...

வாகனம்: யோவ் விவரம் தெரியாம பேசாதய்யா இது கமிசனர் காரு.

முத்துராம்: என்னது கமிசனர் காரா? இதுவா? அட போங்க சார். கமிசனர் ஆவது இந்த சின்ன கார வாங்குரதாவது.

நீதி: அதானே இம்புட்டு சின்ன காரா வாங்க போறாரு. அவர் கிட்ட இருக்குறது எல்லாமே இனோவா, பொலிரோன்னு பெருசு பெருசாவில்லையா இருக்கும்.

என்று பேசிக்கொண்டே...

தொப்பிய கலட்டுனாக்க வெயிலு மண்டைய பொலக்குதையா என்று காரின் மீது இருந்த தொப்பியை எடுத்து மாட்டி கொண்டார். தொப்பியில் இருந்த சிங்கம் கம்பீரமாய் பளீர் என்று தெரிந்தது.

அடேய் மாட்டு பயலே. கண்ணுமுன்னு தெரியாம இப்படியா வண்டியே ஒட்டுவீறு. ஜனங்களுக்கு ஏதாவது ஒன்னு கணக்கா ஒன்னு ஆகிருந்தா என்னாவுல பண்ணுவீரு? ஜீப்ப கொண்டாயா ஏத்துயா வண்டியில.

வாகனம்: சார் நீங்கபாட்ல இந்த முத்து பேச்ச கேட்டு எதுவும் பண்ணிடாதிங்கே... கமிசனருக்கு ஒரு பொண்ணு இருக்கு தெரியும்லே.

நீதி: ஆமா.

வாகனம்: அந்த பொண்ணுக்கு வாங்கினது தான் இந்த காரு.

நீதி: அந்த பொண்ணு பாரின்லல்லயா இருக்கு.

வாகனம்: அட வந்து மூணு நாள் ஆவுது சார். இது கூட தெரியாம என்ன சார் பெரிய அதிகாரி நீங்க.

நீதி: யோவ் அப்போப்போ சார் வீட்டுக்கு கூட மாடே ஒத்தாசி வேல நீ தாம்லே பாத்துகிட்ருக்கே...

வாகனம்: அதுக்கு முன்னாடி நீங்க தானே பாத்திங்கே... என்றான் முனங்கிய படி.

நீதி: என்னயா?

வாகனம்: அட ஒண்ணுமில்ல சார். வீணா பேசி வம்புல மாட்டிகாதிங்கே.. அவ்வளோ தான் சொல்லுவே. நீங்க அந்த பையன அப்படியே அனுப்புங்க. இங்குட்டு க்ரொவ்ட நா பாத்துக்குறேன்.

நீதி: வெயிலு கொஞ்சம் தூக்கலா தான்யா இருக்கு. என்று சொல்லி கொண்டே தொப்பியை கார் மீது வைக்க சென்றார். அந்த பையனை பார்த்து விட்டு தொப்பியை கவுட்டை கைக்குள் வைத்து கொண்டு.  கெளம்புங்க தம்பி. நீங்க கெளம்புங்க. சார கேட்டதா சொல்லுங்க.

சத்யன்: சார் சாரி சார்.

நீதி: பரவால்ல இருக்கட்டும்.

சத்யன்: இது கமிசனர் வண்டில்ல அவரு பொண்ணு வண்டி அதான் என்ன பண்றது எப்டி சொல்றதுன்னு புரியாம நின்னுருந்தேன். நீங்களே புரிஞ்சி கிட்டிங்க. ரொம்ப தாங்க்ஸ் சார்.

வியாபாரி முத்தம்மாள்: அடேய் நில்லுடா நசுக்குன பொருளுக்கு பணத்த வச்சிட்டு கெளம்பு.

நீதி: கெழவி சும்மா இருக்கமாட்டே? நீங்க போங்க தம்பி.

டிரைவர் கார் எடுத்து கிளம்பினான்.

அங்கிருந்த வியாபாரிகள் அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை பார்த்து நக்கலாய் சிரித்தனர்.

தங்கள் நிலைமையை புரிந்து கொண்ட நீதிதேவன்.

நீதி: ஏலே கெழவி நசுங்குன காயா போட்டுடாதே... நாளக்கி கொண்டாருவையே சுத்தமான காயி அத வீட்டுக்கு அனுப்பி வையி. என்னா சொன்னது விளங்கிடதாவுல?

வியாபாரி முத்தம்மா: நல்லா காயா போட்டுவிடுறேன் ராசா.

நீதி: ம்ம். கெளம்பு கெளம்பு...

கம்பீரமாய் தொப்பியை எடுத்து மாட்டி கொண்டார் நீதிதேவன்.

தொப்பியில் இருந்து சிங்கம் தவறி கிழே விழுந்திருந்தது.

-திவான்

கிளைகளில்லா பறவைகள் (சிறுகதை)

அந்த கிராமம் அவ்வளவு அழகானது அல்ல. ஒரே ஒரு பெரிய ஆலமரம் அதை சுற்றி முப்பது முதல் நாற்பது வீடுகளே இருக்கும். அதிலும் பாதிக்கு மேல் குடிசை வீடுகள்.
அந்த ஊரில் நாய்கள் அதிகம். அந்த நாய்கள் எதுவும் பார்ப்பதற்கு தெரு நாய்கள் போல இருக்காது.

அன்று காலை செல்வத்தின் கண்களில் சூரிய ஒளி பட்டு அவனது தூக்கத்தை கெடுத்தது. சிறு சிறு ஓட்டை விழுந்த அந்த போர்வையை எப்படி போர்த்தி கொண்டாலும் ஏதாவது ஒரு ஓட்டை வழியே ஒளி வந்து இம்சை செய்தது. அவனது தாத்தா காளிமுத்துவும் அவனை எழுப்ப விருட்டென எழுந்து சரட்டென திரும்பி படுத்து கொண்டான்.

நீ வெளங்க மாட்டா... வெக்காலி காலையில சீக்கிரமா எந்திரி எந்திரின்னு எத்தன தடவ சொன்னாலும் கேக்குற மாதிரி இல்ல. என்று தனது பத்து வயது பேரன் செல்வனை திட்டி விட்டு அந்த அழுக்கான சட்டையை மாட்டி கொண்டு அந்த ஆலமரத்தை நோக்கி கிளம்பினார்.

அவனுக்கு இனி தூக்கம் வருவதாக தெரியவில்லை. எழுந்து வந்து தன் குடிசைக்கு முன் குத்த வைத்து உட்கார்ந்தான்.

தூரத்தில் ஆறேழு சிறுவர்கள் டயர் ஒட்டியபடி வந்து கொண்டிருந்தனர்.

இவன் குடிசைக்குள் சென்று டயர் எடுத்து வெளியே வந்து நின்றான். அவனை கண்டதும் மற்ற சிறார்கள் நின்றனர்.

செல்வம் போலாம் டா என்றான் வேகமாக.

டேய் செலுவா, தேனு மிட்டாய் வாங்குறதுக்கு காசு வச்சிருக்கிய டா?

தேனு மிட்டாய் வேணாம் டா. உங்க கூட டயர் மட்டும் ஓட்டுறேன் என்றான் செல்வம்.

அதெல்லாம் முடியாது, எல்லோரும் காசு வச்சிருக்கோம். நாங்க பங்கு எல்லாம் தர மாட்டோம். ஒத்த ரூபா கூட இல்லையா டா செலுவா. என்னட நீ.? உங்க தாத்தா கிட்ட கேளு டா. என்று சொல்லி விட்டு டயரை ஒட்டியபடி கிளம்பினர்.

பெட்டி கடையில் ஒரு ரூபாய் கொடுத்து ரெண்டு பீடி வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்து கொண்டு திரும்பி ஆலமரத்து திண்ணைக்கு நடந்து கொண்டிருந்த போது அவருடனே செல்வமும் ஒட்டி கொண்டு நடந்து வந்தான்.

தாத்தா ஒத்த ரூவா இருந்தா தாங்க.

போடா அப்டியே அடிக்க போறே. நேத்து கொடுத்த காசு எங்க டா.

தாத்தா நேத்தே செலவு ஆய்டுச்சுத்தா.

என்ட்ட இல்ல போய் தொல. உங்கப்பே ஓடுகாலிய கட்டி கிட்டு தூக்குல தொங்கிபுட்டான். உன்ன என் கழுத்துல தொங்க விட்டான் என்று முனங்கிய படி பீடியை ஒரு இழு இழுத்தான்.

டயரை ஓட்ட ஆவலாக இருந்த செல்வத்தின் முகம் வாடி போனது.  தலையை கிழே தொங்க போட்டு மண்தரையை பார்த்தபடி இருந்தான்.

காளிமுத்து புகையை வெளியே ஊத்திவிட்டு பொறு, முத்தையா வரட்டும் என்றான்.

ஆலமரத்தில் இருந்து ஒரு ஐந்து வீடு தள்ளி உள்ள ஒரு சந்தில் முகப்பில் நான்கு தூணும், இரு பக்க திண்ணையும், ஒரு மேல் மாடியும் கொண்ட ஒரு சிறு வீடு தான் முத்தையாவின் வீடு. அவர் காளிமுத்துவின் நெருங்கிய நண்பர். சிறுது வசதிகள், நல்ல குடும்பமாக இருந்தும் தாமரை இழை தண்ணீர் போல அந்த குடும்பத்திற்கு ஒவ்வாத மருமகள்.

என்னங்க உங்க அப்பா இப்பிடி செல்லுராறு என்று இலுத்தாலே.. போதும் என்னடி சொன்னான் எங்கப்பே என்று அவளிடம் கேட்டு கொண்டே வேகமாக நடந்து வந்து முத்தையா முன்பு நின்று, பட படவென பேசி இறுதியாக நாலு அடி கொடுத்து விட்டு தான் கிளம்புவான். முத்தையா அடி வாங்குவதை சகிக்காத அவளது மனைவி அழுவதை தவிர வேறு வழியின்று சிலை போல திண்ணையில் கிடப்பாள். மீறி கேட்டு பல முறை அவளும் அடி வாங்கி இருக்கிறாள். வத்தலும் தொத்தலுமான இந்த உடம்பை வைத்து கொண்டு அந்த காட்டு மனிதனிடம் அடி வாங்க சத்தில்லை. அதனால் தான் இந்த மௌன அழுகை.

அன்றும் முத்தையா ஏதோ சொல்லிவிட்டார் என்று அவரது மகன் கொதித்த படி முத்தையா முன் வந்து நின்றான். ஏன்டா சோத்த அமுக்கி கிட்டு சும்மா உக்கார முடியலைய என்று கண்டபடி திட்டி அடித்தான்.

அடிவாங்கி கண்ணீருடன் வழக்கமாக இதே நேரத்தில் சந்திக்கும் தன் நண்பனை சந்திக்க கிளம்பினான்.

செல்வம் அதே இடத்தில தலை குனிந்த படியே நின்று இருந்தான். அடுத்த பீடியை இப்போவே பற்ற வைக்கலாமா? இல்லை கொஞ்ச நேரம் போகட்டுமா என்ற ஆழ்ந்த யோசனையில் காளிமுத்து.

இருவரது மனபோக்கையும் முத்தையா குறுக்கிட்டு கலைத்தார். திண்ணையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

டேய் முத்தையா ஒரு ஒத்த ரூவா இருந்த தாடா இந்த பயலுக்கு கொடுத்து அனுபிடலாம் என்றான் காளிமுத்து.

டேய்  காளி நாம நம்ம பொண்டடிங்க பேச்ச கேட்டு என்னகாவது நம்ம அப்பன ஆதல ஒரு வார்த்தையாவது பேசி இருகோமாட?

இல்ல.

எ மகே அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டு இப்டி கொடும பண்றானே டா. எ பொண்டாட்டிய நான் கூட அடிச்சதில்ல அவன் அப்படி அடிக்கிறான். என்று கண்கலங்கியவர் அழ ஆரம்பித்து விட்டார்.

விடப்ப விடப்ப இத போல நெறய பாத்தாச்சு என்று கூறிய காளி முத்து, அவசரம் தாங்க முடியாமல் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் பேரனை கலட்டி விடவே அவ்வளவு அவசரமாக முத்தையா அருகில் சென்று கேட்டார், முத்தையா பேச்சு வாக்குல அந்த ஒத்த ரூவாய மறந்துடாதே.

மெதுவாக திரும்பி பார்த்த முத்தையா கண்களை துடைத்து கொண்டு தனது பையில் இருந்து ஒரு ரூபாய் எடுத்து கொடுத்தான்.

அன்று நடுஇரவு, ஒரு ஆட்டோ அந்த ஆலமரத்துக்கு அடியில் வந்து நின்றது. உள்ளே இருந்து ஒரு நாய் இறக்க பட்டு அதற்க்கு விரும்பிய உணவுகளை எல்லாம் அந்த நாயை சுற்றி வைத்தனர்.

ஒரு சிறுவன் தேம்பி தேம்பி அழுத படி ஆட்டோ குள் இருந்தான். அப்பா கூட்டி போய்டலாம் என்றான். சும்மா இருடா இது கொளாச்சி கிட்டே இருக்குது, அக்கம் பக்கத்துக்கு வீடு காரங்க நம்மள கேக்குரங்கள்ள. சும்மா இரு உனக்கு வேறு நாய் வாங்கி தரேன் என்றார் அப்பா.

அந்த அப்பாவின் பேச்சு ஒரு கேலி பொருளை பற்றியதாக இருந்தது. அந்த சிறுவனின் நெஞ்சம் தன் நெருங்கிய ஜீவனை பிரியும் அழுகையில் இருந்தது.

அந்த நாய் அங்கு வைக்க பட்ட உணவு பொருள் மீது கவனம் போகவே, இவர்கள் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தனர். நாய் உஷாரானது. இவர்கள் வேகமாக செல்ல நாய் பின்னால் துரத்தி கொண்டே வந்தது. ஆட்டோவின் வேகத்திற்கு ஈடு கொடுத்தது, ஆனால் ஆட்டோ வேகமாக சென்று விட்டது.

காலை ஆலமரத்திற்கு அடியில் பீடி பிடித்த படி காளிமுத்து அமர்ந்து இருந்தான். டயருடன் செல்வம்.

அங்கு நாய் குறைக்கும் சத்தம் கேட்கவே சற்று தலையை திருப்பினார். பீடி பிடித்து புகை விட்ட படி உன்னிப்பாக நாய்களை நோட்டமிட்டான் காளி முத்து. அந்த புது நாய் கண்ணில் தட்டுபட்டது. வெக்காளி அப்புறம் என்ன மயித்துக்கு நாயா வாங்குறாங்க. இந்த ஊர்ல வந்து கொண்டு விடுறதுக்கா? என்று முனகியபடி திரும்பினால், செல்வம் சுடு சுடுவென நின்றுந்தான். அவனை கண்டதும் மீண்டும் முகம் இறுகி கொண்டது காளிமுத்துவிற்கு.

அங்கிருந்து முத்தையா நடந்து வந்து கொண்டிருந்தான்...

அவரது முதுகை பார்த்தவர்கள் எல்லோரும் அச்சச்சோ என்று திகைத்தனர்.

செல்வத்தை நோக்கி நடந்து வந்தார். பையில் இருந்து ஒரு ரூபாய் எடுத்து கொடுத்தார். அதை கண்ட காளிமுத்துவிற்கு ஆச்சரியம். செல்வம் குடு குடுவென டயரை ஓட்டியபடி பறந்து விட்டான்.

டேய் முத்தையா என்னட..!? என்றான் காளிமுத்து.

என்ன டா செல்வத்துக்கு காசு கொடுத்ததே இல்லையா என்ன?

இல்ல, உன் கிட்ட காசு வாங்குறதே பெரிய விஷயம் ஆச்சே, கேக்காம தர்ற? அதான் ஆச்சிரிய பட்டேன்.

ஒத்த ரூவா தான டா அதுக்கு ஏ இவ்வளவு திகைப்பு.

என்னமோப்பா எனக்கு என்னவோ நீ இன்னக்கி பண்ணது ஆச்சிரியமா இருந்துச்சு. எப்போவும் பண்ணாதது இன்னக்கி பண்ணது போல இருந்துச்சு.

டேய் காளி அப்போப்போ என் வீட்டுக்கு வாடா... மனசே சரி இல்ல.

நா வந்தா தான் உன் மகே அப்படி அசிங்கமாபேசுறானே.

நா அவசர பட்டுட்டேன், வீட்ட அவனுக்கு எழுதி கொடுத்திருக்க கூடாது. எல்லாம் போச்சு ஏ காலத்துக்கு அப்புறம் என் பொண்டாட்டி சுப்புக்கு என்ன ஆதரவோ தெரியல.

சரி விடப்ப முத்தையா வேற ஏதாவது பேசுவோம் என்று சொல்லி கொண்டே பீடியை எடுத்து பற்ற வைத்தான் காளி.பொத்தென காளியின் மடியில் விழுந்தார் முத்தையா.

பயங்கரமாக பெல்ட்ஆல் அடித்து இருக்கிறான் அவரது மகன். முதுகு முழுவதும் அடிவாங்கிய அச்சு பதிந்திருந்தது..

தட்டி எழுப்பினார் காளி அவன் எழவில்லை. பேச்சும் இல்லை மூச்சும் இல்லை.

இரண்டு நாள் போனது. ஆலமரத்தடியில் காளி அமர்ந்து கையை பிசைந்து கொண்டிருந்தார். முகம் முழுவது இறுகி போய் இருந்தது. டயருடன் செல்வம் தரையை பார்த்த படி.

நாட்கள் உருண்டோடியது....... ஐந்தாறு மாதம் சென்றது.

காளியின் முகம் முழுவது எலும்புகள் பீரிட்டு தெரிந்தது. வாயின் இரு புறமும் அகலமான குழி விழுந்திருந்தது. மூச்சி விடுவதற்கே சிரமம். பீடியை பற்ற வைத்தார். அந்த ஒரு இழுவை இழுப்பதர்க்கே மிகவும் சிரம பட்டார். புகையை கஷ்ட பட்டு இழுத்து தொண்டைகுழிக்குள் போகும் பொழுது புரை ஏறி இருமல் வந்தது. இரு தடவை இருமி விட்டு மூணாவது முறை பெரு மூச்சுடன் இரும்ப தொடங்கினார்.

சிறுது நேரம் பிறகு.

ஆலமரத்தில் இருந்து காய்ந்து போன இழை ஒன்று அவர் மார்பு மேல் வந்து விழுந்தது. காளியை பிடித்து உசுப்பி கொண்டிருந்தான் செல்வம். அருகில் சோடா பாட்டிலுடன் பக்கத்து கடைகாரர். அப்போது மட்டும் காளிமுத்துவை சுற்றி எத்தனை கூட்டம். அங்கு கேட்டு கொண்டிருந்தது ஒரே அழு குரல் செல்வதினுடயது மட்டும்.

எல்லா காரியமும் முடிந்தது.

சமுதாயம் குழந்தை குப்பை தொட்டியில் கிடந்தால் எடுத்து கொடுக்கும். அனாதை பிணம் என்றால் எடுத்து எரிக்கும்.

செல்வம் தனி மரம் ஆக்க பட்டான்.

அன்று பயங்கர பசி, தாங்க முடியவில்லை. நேராக முத்தையாவின் வீட்ற்கு சென்றான். வெளியே முத்தையாவின் மகன் தனது வண்டியை துடைத்து கொண்டிருந்தான்.

அவன் வந்ததை பார்த்து என்ன என்று கேட்டான். செல்வம் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு. எனக்கு பத்து ரூபா வேணும். சாப்ட்டு ஒரு வாரமாகுது என்றான்.

மேலும் கீழும் பார்த்த அவன் சிறுது வினாடிக்கு பிறகு. அவனது தலையை பிடித்து வலிக்கும் படி ஆட்டினான். இந்தா என்று பத்து ரூபாய் நீட்டி இனி இந்த பக்கம் வந்தன்ன கொன்னுருவேன் என்று முறைப்புடன் திட்டி அனுப்பினான்.

அவனும் சரி என்று தலை அசைத்து விட்டு முத்தையா வீட்டு திண்ணையை பார்த்தான். முத்தையாவின் மனைவி முன்பு இருந்ததை விட கல்லாகி போய் இருந்தாள்.

வேகமாக பெட்டி கடையை நோக்கி ஓடினான்.

அங்கு ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டு விட்டு போன நாய் தீனி கிடைக்குமா என்று கடைகாரனையே நாக்கை தொங்க போட்டு பார்த்து கொண்டிருந்தது.

அங்கு வந்த செல்வம் ரெண்டு பன்னை வாங்கி உண்ண ஆரம்பித்தான். சாப்ட்டு கொண்டே நாயை பார்த்தான். நாய், வாலை ஆட்டி கொண்டே தலை சாய்த்து பார்த்தது.

பன்னை சிறுதாக பீய்த்து நாய்க்கு போட்டான்.

நாட்கள் சென்றது. இவனது பசிக்கு உணவு கொடுக்க யாருமில்லை. தினம் மாலை பொழுதில் அந்த பாழடைந்து போன கோவிலில் தரும் சிறுது பிரசாதம் மட்டுமே இவனுக்கு உணவு.

மெட்ரோ சிட்டி போன்ற பெரும் நகரங்களை போல இவன் கிராமத்தருகில் அப்படி எந்த நகரமும் இல்லை. எந்த ஒரு வேலை வாய்ப்பு உள்ள ஊர்களும் இல்லை. ஒரு வேலை அப்படி இருந்திருந்தால் இவன் உணவுக்காக பலரது கையை எதிர் பாத்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.  இவன் வாழ்வதோ அந்த அழகில்லா கிராமத்தில்.

அன்று அவனுக்கு காது அடைத்து போய், கண்கள் இருண்டு போய், வயிறு உள்ளே தள்ளி போய் இருந்தது. பசி மயக்கம்.

அவன் காதுகளில் அமுங்கிய சத்தத்துடன் சிறுவர்கள் பேசுவது கேட்டது. உன்னிப்பாக கேட்க்கும் அளவுக்கு அவனிடம் சக்தி இல்லை. இருப்பினும் ஏதோ சிறுதளவு கேட்க முடிந்தது. டயர் டயர் என்று காதில் விழுந்தது.

பசி மயக்கத்திலும் அந்த சிறு வயது விளையாட்டு தனம் அவனை சுண்டி இழுத்தது. கஷ்டபட்டு எழுந்து அவனது குடிசைக்குள் சென்றான். அங்கு நால்வர் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அதில் ஒருவன் என்ன என்றான்.

செல்வம் டயர் எடுத்துக்குறேன் என்றான்.

நால்வரில் ஒருவனுக்கு பக்கத்தில் அந்த டயர் இருந்தது அங்கிருந்த படியே அதை தூக்கி எறிந்தான்.

செல்வம் அதை எடுத்து கொண்டு அந்த சிறுவர்கள் கூட்டத்தை பார்த்தான்.

அவர்கள் அந்த நாயை துரத்திய படி டயர் ஒட்டி கொண்டிருந்தனர். இவனும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டான். இரண்டடி ஓடினால் கொஞ்சம் கிறு கிறுவென வந்தது. அதையும் பொருட்படுத்தாமல் ஓடினான்.

அந்த சிறுவர்களில் ஒருவனின் அம்மா ஓடி கொண்டிருந்த தனது மகனை கத்தி குப்பிட்ட படியே ஓடிவந்து அவனை இரண்டடி அடித்து விட்டு சொன்னாள் அந்த செல்வம் கூட சேர கூடாதுன்னு சொல்லி இருகேன்ல்ல டா என்று சொல்லி விட்டு மற்ற சிறுவர்களையும் போகாதீங்க என்று கூறினாள் அந்த சிறுவர்கள் கூட்டம் அப்படியே நிற்க்க. செல்வம் அந்த நாயை துரத்திய படி ஓடி கொண்டே இருந்தான்.........

சமுதாயம், குழந்தை குப்பை தொட்டியில் கிடந்தால் எடுத்து கொடுக்கும். அனாதை பிணம் என்றால் எடுத்து எரிக்கும். சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சி மனிதனின் பிறப்புக்கும், இறப்புக்கும்  மட்டுமே. கிளைகள் இன்றி வாழும் செல்வம் போன்ற பறவைகளுக்கு அல்ல.

- திவான் 

நிகழ் காலம் (சிறுகதை)

குழந்தை தூங்கிவிட்ட பின்பும் தொட்டிலை ஆட்டி கொண்டே இருந்தாள் மாலதி. தொலைகாட்சியில் நாடகம் தொனதொனத்து கொண்டிருந்தது, ஆனால் மாலதியோ வேறொரு சிந்தனையில் இருந்தாள்.

வீட்டிற்கு ஒரே பெண். அவள் பிறந்த வீடோ நகரத்தை தள்ளி வெகு தொலைவில் இருந்ததால் சொந்த பந்தங்கள் முக்கிய காரணத்திற்காக மட்டுமே அவர்கள் வீட்டிற்க்கு வந்து சென்றனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டால் நாய் குறைக்கும் சத்தமும், கும்மிருட்டு அமைதி மட்டுமே இருக்கும்.

யாருடன் பேசுவது?

உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அம்மாவுடன் மனம் விட்டு பேச வேண்டியதை தானே பேச முடியும், மாலதியின் அப்பாவோ அவள் தூங்கிய பிறகு தான் வேலை முடித்து வருவார் .

தனிமையிலேயே வாழ்ந்த அவள் திருமணம் என்ற பந்தம் பற்றி விவரம் அறிந்த முதலே அவள் முடிவு செய்து விட்டாள் தன்னை போல் தன் குழைந்தையும் தனிமையில் அவதிப்பட்டு விட கூடாது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய், இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும். ஆணோ, பெண்ணோ இரண்டு குழைந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள்.

பண்ணிரெண்டாம் வகுப்பு முடிந்த உடனே அவளது அப்பா மாப்பிளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பெயர் வசந்த குமார், B.E. Mechanical படிச்சிருக்கார். நல்ல சம்பளம், நல்ல வேலை சொந்த ஊரு சென்னை இந்தாங்க போட்டோ என்று புரோக்கர் நீட்ட அதை வாங்கி பார்த்து விட்டு தன் மகளிடம் கொடுத்தார்.

மாலதிக்கு பிடித்திருந்தது.

வசந்தகுமாரும் சம்மதிக்க திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

வசந்த் திருமணம் முடிந்த கையோடு தனி குடித்தனம் வந்து விட்டான்.

சென்னை புறநகரில் தான் வசந்த குமாரின் வீடு. மீண்டும் மாலதிக்கு அதே தனிமை முன்பாவது அப்பா, அம்மா துணை. இப்போது அதுவும் இல்லை.

சென்னை மிகவும் அசௌகரியமாக  இருந்தது. ஆனாலும் அவள் எதையும் பொருட்படுத்தவில்லை
அவளது எண்ணம் முழுவதும் தன்னுடைய வருங்கால குழைந்தைகளை பற்றியதாக இருந்தது.

அன்று குழந்தை தூங்கிவிட்ட பின்பும் தொட்டிலை ஆட்டி கொண்டே இருந்தாள் மாலதி. தொலைகாட்சியில் நாடகம் தொனதொனத்து கொண்டிருந்தது, ஆனால் மாலதியோ வேறொரு சிந்தனையில் இருந்தாள்.

வசந்திடம் எவ்வளவு சொல்லியும் ஒரு குழைந்தை போதும் என்று முடிவாக சொல்லி விட்டான். இதனால் சண்டை சச்சரவு என்று தொடங்கி இப்போது இருவரும் பேசி கொள்வதே இல்லை.

வசந்த் வேலை முடித்து வீட்டிற்குள் வந்தான். கட்டிலில் காலை நீட்டி அமர்ந்திருந்த அவள் காலை மடக்கி அமர்ந்து கொண்டாள்.

பத்ரூம்குள் சென்ற வசந்த், சோப்பு இல்ல என்று கத்தினான். மாலதி சோப்பு எடுத்து பாத்ரூம் கதவை தட்டினால். கதவை திறந்து சோப்பை வாங்கி கொண்டு கதவை சாத்திவிட்டு மீண்டும் திறந்தான். இன்னும் உனக்கு மனசு மாறலையா? நீ ஏன் புரிஞ்சிக்கவே மாற்ற மாலதி.

நான் புரிஞ்சிக்குரதுக்கு ஒன்னும் இல்லை. நீங்க தான் என்னமோ பெரிய விஷயமா எடுத்து பேசுறீங்க. ஊர்ல எல்லோரும் தான் ரெண்டு, மூணு பிள்ளைங்கன்னு பெத்துக்குறாங்க.

மத்தவங்கள பத்தி நாம ஏன் பேசணும். நம்மளோட நிலமைய பாரு.

மாதம் இருபத்தி எட்டாயிரம் சம்பாதிக்கிறேன்னு தான் பேரு. கைல மிஞ்சுறது ஏழோ, எட்டு தான். குழைந்த பிறந்த அப்புறம் அதுவும் செலவு ஆய்டுது. குழைந்த வளந்த அப்புறம் அவன பள்ளியில சேக்குறதுக்கே டொனேசன் ஐம்பது ஆயிரம் தரணுமாம். என் சக்திக்கு ஏத்த மாதிரி தான் என்னால செயல்பட முடியும்.

அப்படின்னா உங்களுக்கு காசு பணம் தான் பிரச்சனையா போச்சுல்ல.

இல்ல. இருக்குறத வச்சி சந்தோசமா வாழுறத பத்தி பேசிட்டு இருக்கேன்.
இன்னக்கி சென்னை இடுக்குல கால் வைக்க முடியல. எங்க பாத்தாலும் ஒரே ஜனங்க கூட்டம். எதுக்கும் போட்டி, காசு காசுன்னு ஊரே நாரி கிட்டு கெடக்குது. போதும்.
வெளியே போய் அலைஞ்சிட்டு வர எங்களுக்கு தான் தெரியும் கஷ்டம். என்று சொல்லி விட்டு கதவை சாத்தி கொண்டான்.

மாலதிக்கு அழுகை தான் மிச்சம். பேசி பலனில்லை.

வசந்திற்கும் மாலதியின் எண்ணம் புரியாமல் இல்லை. இருந்தாலும் அவன் பொறுமை காத்தான். அவசர படவில்லை.

இரண்டு நாட்கள் பிறகு.

வசந்த் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தான். மாலதி குழைந்தையை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போகணும் என்றாள்.

எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ கூட்டி போயிட்டு வா என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

இவளுக்கு வசந்தின் மேல் மேலும் கோபம் வந்தது. வீட்டு வேலை முடித்து விட்டு குழைந்தையை தூக்கி கொண்டு இரு சக்கர வாகனத்தை எடுத்து ஆஸ்பத்திரிக்கு கிளம்பினால்.

குழைந்தை பேரு என்ன மேடம்? என்றாள் நர்ஸ்.
ஆகேஷ் என்றாள் மாலதி.

நர்ஸ் கம்ப்யூட்டர்ல் வரிசை படி பெயர் பார்த்து கொண்டிருந்தாள். அப்போது மாலதி, பெயர் எல்லாம் கொடுக்கல என்றாள்.

நர்ஸ் தேடுவதை நிறுத்தி விட்டு, சாரி மேடம். ஒரு வாரம் முன்னாடியே நீங்க பேர் கொடுத்த தான் டாக்டர் குழைந்தைய பார்ப்பாங்க. நீங்க இப்போ நேம் புக் பண்ணிகோங்க. போய்ட்டு
ஒரு வாரம் கழிச்சி வாங்க.

குழைந்தைக்கு ஜுரம் அதிகமா இருக்கு.

ம்! அதுக்கு இப்போதைக்கு மருந்து எழுதி தரேன் என்று சொல்லி விட்டு. மருந்து சீட்டு நோட்டில் இருந்து ஒரு தாளை கிழித்து தந்தாள்.

என்ன மேடம் வெறும் பேப்பர் தரீங்க என கேட்டாள் மாலதி.

அதுல மெடிசென் பிரிண்ட் ஆகி இருக்கு பாருங்க என்றால் நர்ஸ்.

ஓ! இப்போ இப்படி எல்லாம் மருந்து சீட்டு தர்ரங்கள? என்று சொல்லி மாலதி மருந்து சீட்டை வாங்கி வைத்து கொண்டாள்.

பீஸ் எவ்வளவு மேடம். டு பிவ்டி. பணத்தை எடுத்து குடுத்து விட்டு கிளம்பினாள்.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த அவள் தனது வண்டியை ஸ்டார்ட் செய்ய கிக்கரை மிதித்தாள். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.

பலமுறை முயன்றால் ஸ்டார்ட் ஆவதாக தெரியவில்லை. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று தனது பார்வையை சுழற்றினாள்.

இயந்திரத்திற்கு கீ கொடுத்தது போல நிதானம் இன்றி பரபரத்து கொண்டிருந்தது நகரம்.ஒவ்வொருவரின் முகத்திலும் கால அட்டவணை (schedule notice) ஒட்டியிருந்தது. யார் முகத்திலும் சாந்தம் தெரிவதாக இல்லை.

முகத்தில் பரபரப்புடன் வேகமாக நடந்து கொண்டிருக்கும் யாரேனும் ஒருவரை நிறுத்தினால் பளார் என்று கன்னத்தில் அறைந்து விடுவார் போல் மனதில் தோன்றியது.

யாரிடமும் உதவி கேட்க்க தோன்றவில்லை அவளுக்கு. வண்டியை மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு சென்று காண்பித்தாள்.

பிஸ்டல் போய்டுச்சு, வண்டி வேற சர்வீஸ் விடல போல. ஒரே டஸ்ட்-அ இருக்கு மேடம் என்றான் மெக்கானிக்.

சரி வெயிட் பண்றேன், பண்ணி தாங்க.

மேடம் அஞ்சி நாள் ஆவும்.

அவ்வளோ பெரிய வேலைய?

இந்தா பாருங்க ஏற்கனவே எட்டு வண்டி நிக்குது இது முடிஞ்சா அப்புறம் தான் பாக்க முடியும்.  அஞ்சி நாள் கழிச்சி வந்து வாங்கிகோங்க இல்லன உங்க அட்ரஸ் கொடுத்துட்டு போங்க.. வண்டி கொண்டந்து விடுறோம். ஹோம் டெலிவரின்ன அதுக்கு தனிய நூறு ரூபா ஆகும் மேடம்.

சரிப்பா அட்ரஸ் எழுதிக்கோ என்று சொல்லி விட்டு பஸ் ஸ்டாப்க்கு வரும் பொழுது இரவு ஏழு மணி ஆகி விட்டது.

முகத்தில் களைப்பு. கால்கள் சிறுது நேர ஓய்வுக்கு ஏங்கியது. அமர கூட இடமில்லை.

தனது சொந்த அத்தை மகளிடம் இருந்து போன் அழைப்பு. எடுத்து பேசினால். இருவரும் நலம் விசாரித்து கொண்டனர்.

பிறகு அக்கா மகள் சந்தோசமாக ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டால்.

ஹேய் மாலதி என் பிள்ளைக்கு சரஸ்வதி மெட்ரிகுலேசன் ஸ்கூல்ள்ள சீட் கிடைச்சிருக்கு டி. நல்ல வேல குழைந்தை பிறந்தப்பவே பதிவு செஞ்சி வைத்தோம்.. சரி, உன் குழைந்தைக்கு பதிவு செஞ்சி வச்சாச்ச?

அக்கா என்ன விளயாடுரேயா? குழைந்தைக்கு இப்போ தான் ரெண்டு வயசு ஆகுது.

ரெண்டு வயச? அடிபாவி இன்னுமா பதியல? நீ என்ன நம்ம படிக்கிற காலத்துல இருந்த மாதிரி நினச்சிடிய? சீக்கிரமா சொல்லி பதிய சொல்லு உன் புருஷன் கிட்ட இல்லன சீட்டு கிடைக்குறது கஷ்டம். அப்புறம் உன் பிள்ளைய ஏதாவது சின்ன ஸ்கூல்ள்ள சேக்க வேண்டியதாகிடும் என்று சொல்லி முடிக்கும் போது... மாலதி நிகழ் காலத்தில் இருப்பதை உணர்ந்தாள். உலகம் மாறி இருப்பதை உணர்ந்தாள். சற்று நேரம் அவளுக்கு பதில் அளிக்கவில்லை. வேறு மாதிரியான எண்ணங்களில் இருந்த அவளது சிந்தை சற்று பிரமித்தும், அதிர்ந்தும் போய் இருந்தது.

ஹலோ ஹலோ என்ற குரல் மாலதி மூளைக்கு எட்டியவுடன் ம்ம்ம் சொல்லுங்க என்றால்.

தூரத்தில் அவள் ஏற வேண்டிய பேருந்து வந்து கொண்டிருந்தது. இவள். அக்கா நான் அப்புறம் பேசுறேன் எனக்கு பஸ் வந்துருச்சு என்று சொல்லி கட் செய்தால்.

பேருந்து ஏறுவதற்கு முன் வைத்த காலை நிறுத்தினால்.
பேருந்தின் வடிவமே வேறு மாதிரியாக இருந்தது.

இட புறத்தில் சாய்ந்தும், வல புறத்தில் சற்று உயர்ந்தும் இருந்தது. வண்டியின் சக்கரம் சாலையில் பாதிக்கும் மேல் அமுங்கி இருந்தது. இதற்க்கு மேல் இநத பேருந்தில் ஒருவர் ஏறினாலும் வண்டி கவிழ்ந்து விடும் போல் தோன்றியது.

இப்படி ஒரு கூட்டத்தை அது வரை தன் சொந்த ஊரிலும் கூட பார்த்தது இல்லை. நேரமாகி விட்டது.

அதனால் இநத பேருந்திலேயே கஷ்ட பட்டு ஏற முற்பட்டால். கூட்ட நெரிசலில் இடுப்பில் வைத்திருந்த குழைந்தை முகம் சற்று நசுக்க படவே வீர்ர்ர்ர்ர்ர் என்று அழ தொடங்கியது. மாலதி திக்கு முக்காடி போனால். படியும் கண்ணில் தெரியவில்லை. குழைந்தை அழுகை சத்தம். இறங்க வேண்டிய கூட்டம் மேலிருந்து கிழே தள்ள. ஏற வேண்டிய கூட்டம்  கீழிருந்து மேலே தள்ள. இநத நேரத்தில் வண்டி லேசாக நகர தொடங்கியது. அவசர அவசரமாக இறங்க முற்பட்ட கூட்டம் மேலே ஏறிய கூட்டத்தை படியை விட்டு தள்ளியது. கேட்க கூடாத கொச்சை வார்த்தைகளும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டது. கடைசியாக ஏறி கொண்டிருந்த கூட்டத்தை கிழே தள்ளி இறங்கினர். நல்ல வேலை மாலதி ஏறி கொண்டாள்.

பேருந்து மாலதி சென்று அடைய வேண்டிய இடத்திற்கு இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் ஒரு வழியாக சென்றடைந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய மாலதி பெரு மூச்சு விட்டால். அதன் தொடர்ச்சியாக குழைந்தையும். குழைந்தை சாதரணமாக பார்ப்பது மாலதிக்கு முறைப்பது போல தெரிந்தது.

மருந்து சீட்டை எடுத்து மெடிக்கல் ஷாபுக்கு போய் மருந்து வாங்கினால். அவள் கண்ணில் அது பட்டது. இன்று நிகழ்ந்த நிகழ்வுகளால் அவள் உணர கூடியதை உணர்ந்திருந்தால். அவளுக்கு அது கட்டாயம் தேவை என்று பட்டது. மருந்துடன் அதையும் வாங்கி கொண்டு கிளம்பினால்.

வீட்டிற்கு சென்று அலங்கோலமாக கிடந்ததையெல்லாம் சரி செய்து விட்டு, அவள் கொண்டு வந்த அதை கட்டில் அருகில் இருக்கும் டிராயர் குள்ளே வைத்து விட்டு, முகம் கழுவி புத்துணர்ச்சியுடன் அமர்ந்திருந்தால்.

வசந்த் வண்டி சத்தம் கேட்டதும், மாலதி மனதுக்குள் ஏதோ ஒரு சந்தோசம்.

வேகமாக உள்ளே வந்த வசந்த் மறந்து வைத்து விட்டு போன செல் போனை தேட ஆரம்பித்தான்.

வந்ததும் வராததுமா என்ன தேடுறீங்க?

என் செல் போன்-அ ஆபீஸ் போகும் போது மறந்து வச்சிட்டேன். எங்க வச்சேன்னு தெரியல.

அப்படியா எனக்கும் தெரியலையே! ஒரு வேலை இந்த டிராயர் குள்ள இருக்கான்னு பாருங்க என்று தான் அமர்ந்து இருக்கும் கட்டில் அருகில் உள்ள டிராயரை காட்டினாள்.

டிராயர் அருகில் வந்த வசந்த் டிராயரை திறந்தான். அதில் செல் போன் இல்லை. ஒரு காண்டம் பாக்கெட் இருந்தது. புருவத்துடன் கண்களை உயர்த்தி பார்க்கும் பொழுது மாலதி புன்னகையுடன் என்னை மன்னிச்சிருங்க ப்ளீஸ் என்றாள்.

இருபது நிமிடம் பிறகு. இன்று தனக்கு நிகழ்ந்த நிகழ்வுகளை தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டு, இருவரும் பேசி சமாதானம் ஆகினர். மாலதி, வசந்தின் அன்பு அரவணைப்பில் இருந்தாள்.

இந்தாங்க உங்க செல் போன் எதையாவது தொலைச்சிட்டு டென்ஷன் ஆகுறது.

நான் எத தொலச்சலும் தேடி கொடுக்க தான் நீ இருக்கேயே.

சாரிங்க, இவ்வளவு நாள் எனக்கு புரியல. இன்னக்கி தான் நான் நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டேன். இவ்வளவு நாள் நீங்க சொல்றது கேக்காம ரொம்ப சண்ட போட்டுட்டேன் சாரி.

சரி விடு மாலதி. அப்புறம், ஒரு நல்ல விஷயம் வீடு புறநகர்ல இருக்குறதுனால தான உனக்கு ரொம்ப தனிமையா இருக்கு. நாம கொஞ்ச நாள்குள்ள சிட்டி பக்கத்துல குடி போய்டலாம், அதுக்காக வீடு பாத்துட்டு இருக்கேன் சரியா.

சரிங்க என்று சொல்லி வசந்தின் நெற்றியில் முத்தமிட்டாள் மாலதி.


- திவான்

இரா ஜியின் சம்பவங்கள் - சிறுகதை

சொல்லுங்க சார்.

ரா ஜீ.

ரா ஜீ???!!!

எஸ் பகவான் ஸ்ரீ ரா ஜீ.

ஆமா சார் தெரியும்.

அவங்கள தான் கொலை கேஸ் சம்மந்தமா நீங்க விசாரிக்க போறீங்க...

அவங்களயா?!

எஸ். ஏற்கனவே ரெண்டு முறை அவர் மேல கம்ப்ளைன்ட் வந்தது. ஆனா என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரியும்.

ஆமா ப்ரூப் பண்ண முடியலன்னு கேள்வி பட்டேன்.

எஸ் பட், ஹி இஸ் ஜென்டில்மேன்.

எப்படி சொல்றீங்க சார்.

இது என்னோட பெர்சனல் ஒபீனியன்.

இதை நான் இவர்கிட்ட கேக்கலையே என்று மனதில் நினைத்தபடி ஓகே சார் என்று அசட்டு சிரிப்பை உதிர்த்தான் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார்.

ஓகே நீங்க ஆசிரமத்துக்கு இப்போ கிளம்பினா சரியா இருக்கும். நான் அப்பைன்மென்ட் வாங்கி வச்சிர்க்கேன்.

ஓகே சார் என்ற படி சல்யுட் செய்துவிட்டு கிளம்பினான்.


இருபது ஏக்கர் பரப்பளவுள்ள அந்த ஆசிரமம். சற்று பிரமிக்க வைத்தது. விசாலமான மண்டபங்கள்,ஏராளமான பக்தர்கள் கூட்டம். அன்று அமாவசையோ , பவுர்ணமியோ கூட இல்லை. அன்று வெள்ளி கிழமை கூட இல்லை. வார விடுமுறை நாள் கூட அல்ல. புதன் அன்று இவ்வளவு கூட்டமா???

நல்ல வேலை யுனிபர்ம்ல வரல செந்தில் என்று தன்  கான்ஸ்டபிளிடம் சொன்னார்.

ஆமா சார் என்றார் செந்தில்.

செந்தில் முப்பத்தைந்து வயதை தாண்டியவர். அவருக்கும் ராஜேஷ்க்கும் நல்ல புரிதல் இருந்தது. ராஜேஷ் எங்கு சென்றாலும் செந்திலை தான் அழைத்து செல்வார்.

இருவரும் உள்ளே நடந்தனர்.

அங்கிருந்த ஆசிரம பெண் வேலையாள் ஒருவரிடம் இவர் அனுப்பி வைத்து வந்திருக்கிறோம் என்ற தகவலை சொன்னவுடன். அவர்களை ஆசிரமத்தில் வலது புறத்தில் அமைந்திருக்கும் கட்டிடத்திற்குள் அழைத்து சென்றாள்.

ராஜேஷ் திமிர் பிடித்தவன், தெய்வ நம்பிக்கை உள்ளவனும் கூட. ஆனால் சாமியார், பூசாரி என்று யாரவது வந்தால் வார்த்தையால் விலாசி விடுவான்.

கட்டிடத்திற்குள் நடந்து கொண்டே இருந்தனர். இந்த இடம் ராஜேஷ்க்கு புதிதாய் இருந்தது.
அவன் மனது சலனமில்லாமல் அமைதியாய் இருந்தது. ஐந்து கொலை வழக்கு, ஏழு கொள்ளை வழக்கு விசாரணை, இங்கு செல்ல வேண்டும், இவனை விசாரிக்க வேண்டுமென்கிற தொனதொனத்தல்கள் மனதில் அறவே இல்லை. காலி கோப்பையை கவிழ்த்தி வைத்தது போல இருந்தது.

ராஜேஷ் ஆசிரமத்தை நோட்டமிட்டு கொண்டே நடந்தான்.

வெளிநாட்டு பெண்கள் அழகழகாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.

நடந்து செல்லும் வழியில் வரும் அறைகளில் கூட்டம் கூட்டமாக தியானம் மேற்கொண்டிருந்தனர்.

அவனது காதுகள் மெல்லிய இசை சத்தத்தால் வருடபட்டுகொண்டிருந்தது. அப்பொழுது தான் கவனித்தான் கட்டிடம் முழுவதும் அங்கங்கே குட்டி ஸ்பீக்கர்கள் மாட்டபட்டிருப்பது. அந்த ஸ்பீக்கரை பார்க்கும் பொழுது தான் அங்கங்கே இருந்த CV கேமராவையும் கவனித்தான் ராஜேஷ்.

அந்த அறை வந்தது. அறை கதவை திறந்ததும் ராஜேஷ்க்கு ஜில்லென்று இருந்தது.

ராஜேஷ் அங்குமிங்கும் பார்த்தான் ஏசி எங்கு உள்ளதென்று.

செந்தில் உனக்கு கூலா இல்ல?

ஆமா சார்.

அவர்கள் முன்பு நடந்து சென்றவள் ஓரிடத்தில் நின்றாள். பிறகு மெதுவாய் திரும்பினாள்.

உங்களோட உடல்ல ஒரு வித மாற்றம் தெரியுதா? என்று வினாவினாள்.

ராஜேஷ் இல்லை என்றான்.

பொதுவா இந்த அறைக்குள்ளே வந்தவுடன் உஷ்ணமா பீல் பண்ணுவீங்க. அந்த மாதிரி எதுவும் மாற்றம் தெரியுதா?

ராஜேஷ் இல்லை என்றான் மறுபடியும்.

சரி நல்லது. அந்த சோபால உட்காருங்க. நீங்க ஒரு மணி நேரம் வெயிட் பண்ண வேண்டி இருக்கும். குருஜி தியனத்தில இருக்குறார் என்றாள் அவள்.

ஆனா நாங்க உடனே கிளம்பனும் என்றான் ராஜேஷ்.

அப்பொழுது உள்ளே இன்னொரு அழகான பெண் ஒருத்தி வந்தாள்.

சற்று பவ்வியமாக தலை குனிந்த படி அவள் முன்பு வந்து நின்றாள்.

அம்மா நீங்க ஏன் இந்த வேலை செய்து கொண்டு நீங்க போங்க நான் பார்த்துக்குறேன் என்று மரியாதையுடன் கூறினாள்.

சரி எனக்கு வேறு வேலையும் இருக்கு நீ இவங்களை பார்துக்கோமா என்று சொல்லிவிட்டு ராஜேஷை நோக்கி நடந்து வந்து அவனது உள்ளங்கையை தொட்டு பார்த்தாள்.

இதோ ஜில்லுன்னு இருக்கே என்றாள்.

ஆமா, ஆனா நீங்க உஷ்ணமா இருக்கும்ன்னு சொன்னீங்களே.

ஆனா நீங்க எதுவுமே மாற்றம் தெரியலன்னு சொன்னீங்களே... அது தெரிந்து தான் நானும் விளையாடினேன்.இது பகவான் இடம். இங்க வந்துட்ட நீங்க மாற்றம் உணர்ந்து தான் ஆகணும் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் .

இவங்க யாரு என்றான் ராஜேஷ் அந்த பெண்ணிடம்.

இவங்க எங்க அம்மா.

அம்மான்னா?

தாய்.

உன் பேரு என்னமா என்றார் செந்தில்.

தேவகி.

இப்போ போன உங்க அம்மா பேரு?

அம்மாவை பேர் சொல்லி அழைக்க கூடாதென்பது பகவானின் உத்தரவு.

சரி உங்க பகவான் எப்போ வருவார்?

வந்துவிடும் நேரம் தான். இன்னும் சிறுது நேரத்தில் வந்திடுவார் என்று சொல்லி விட்டு அவளும் கிளம்பினாள்.

அந்த அறை அமைதியாக இருந்தது.

ஆடை வெள்ளை நிறத்திற்கு உதாரணமாய் இருந்தது. பொலிவான முகம், நீளமான தாடி, வழுக்கை தலை. தூய்மையான ஒளியாக அவர்கள் முன்னே நின்றுருந்தார் பகவான் ஸ்ரீ ரா ஜீ.

வந்த உடனே ராஜேஷ் எழுந்து நின்றான்.

சொல்லுங்க என்றார் ரா.

உங்களோட தோற்றம் பார்த்த பின்ன நீங்க ஒருத்தரை கொலை செஞ்சிட்டதா உங்க மேல புகார் கொடுத்திருக்கார்ன்னு சொல்லவே தயக்கமா இருக்கு. அது இல்லாம உங்கள விசாரணைக்கு கூட்டி செல்ல வேண்டும் இப்போதே. நீங்க எங்க கூட ஒத்துழைக்கனும் என்றார் ராஜேஷ் .

வந்த வேகத்துல விசாரணை வாங்கன்னு கூப்பிட்ட எப்படி என்று சிரித்தார் ரா. மேற்கொண்டு யார் புகார் கொடுத்தாங்க, எதன் நம்பிக்கை அடிப்படையிலே விசாரணைக்கு நீங்கள் என்னை அழைத்து செல்லனும். சாதாரண விசாரணை என்றால் இங்கயே பேசிகொள்ளலாமே என்று முடித்தார் ரா.

உங்க மேல கொலை பண்ணினதா கம்ப்ளைன்ட் கொடுத்தது ஜானகி ராம். அவரோட மகனை நீங்க கொன்னுட்டதா சொல்லிர்க்கார். அப்புறம் பொதுவா சாட்சியை விசாரணை பண்ண தான் வீட்டுக்கு போவோம். அதுவும் எங்களுக்கு வேலை அதிகமா இருந்தா கண்டிப்பா ஸ்டேசனுக்கு வர சொல்லிடுவோம். நீங்க சாட்சி இல்ல உங்க மேல தான் கம்ப்லைண்டே இருக்கு ஸோ, நீங்க வந்து தான் ஆகணும்.

சரி கிளம்பலாம் என்றார் ரா.

செந்திலுக்கு ஆச்சிரியம் அவனுக்கு போன் போடுறேன், இவனுக்கு போன் போடுறேன்னு சொல்லுவார் என்று சந்தேகமில்லாமல் உறுதி செய்திருந்தார். ஒரே வார்த்தையில் அந்த நம்பிக்கை சிதறி போனது.

ராஜேஷ் முன்னே செல்ல பின்னால் செந்திலுடன் ராவும் வந்தார்.

ஆசிரமமே கூச்சலிட்டது. அந்த அறையை விட்டு வெளியே செல்ல விடாமல் அங்கிருந்தவர்கள் தடுத்தனர்.

செந்தில் அங்கேயே நில்லுங்க என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தார்.
நிறைய பக்தர்கள் கூட்டம். இவர்களுக்கு யாருக்கும் தெரியவில்லை அவரது குரு கைது செய்யபடுகிறார் என்பது. தெரிந்தால் இவர்களும் வந்து தடுப்பார். இவர்கள் அனைவரையும் மீறி அழைத்து சென்றால்...
ஒரு வேலை அவர் தந்த கம்ப்ளைன்ட் பொய் என்று நிருபீக்கபட்டால்???!!!
இங்கே இருப்பவர்களில் பல குழப்பங்களை ஏற்படுத்தி விடும். இப்பொழுது கைது செய்வதால் பல விபரீதமான விளைவுகளை விளைவிக்குமென்றெண்ணி உணர்ந்து
 திரும்பி வந்து சாரி சார் இங்கயே விசாரணை வச்சிக்கலாம் என்றான் ராஜேஷ்.

மெல்லிய சிரிப்புடன் வாங்க உள்ளே வாங்க என்று மீண்டும் சிரித்தான் ரா.

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

மற்ற அனைவரையும் வெளியே செல்லும் படி கேட்டு கொண்டார் ராஜேஷ்.

விசாரணை ஆரம்பித்தார் ராஜேஷ்.

ரா அதற்கு முன் தடுத்து இவ்வாறு பேசினார் நீங்க எதுக்காக அர்ரெஸ்ட் பன்னலையோ தெரியல. ஆனா உங்களோட நல்ல மனசுக்கு நன்றி சொல்லி தான் ஆகணும். இந்த இடம், இவ்வளோ ஜனங்க, அவங்க இங்க வசிர்க்க நம்பிக்கை, என் மேல் உள்ள நம்பிக்கை எல்லாமே சிதைக்கமா பார்த்துகிட்டதற்க்கு உங்களுக்கு என் மூலமா, என் ஆசிரமம் மூலமா நன்றி சொல்லியே ஆகணும் என்று ராஜேஷ் முன் வெறும் கையை நீட்டி எடுத்துகோங்க
என்று சொல்ல ராஜேஷ் என்னவென்று தெரியாமல் கையை நீட்டினான்.

அவன் கையில் வாட்ச் ஒன்று வந்து விழுந்தது.

எப்படி இது சாத்தியம் என்று அதிசியமாக அவரை பார்த்தார்.

உடலில் உடுத்தியிருப்பதோ ஒரே ஒரு துணி மட்டும், வேஸ்ட்டியில் சிறு மோதிரத்தை வைத்து கொள்ளுமளவுக்கு கூட தோதாக இல்லை. பிறகெப்படி என்று குழம்பி போனான்.

பிறகு ரா தொடர்ந்தார். இன்னைக்கு நிறைய ஏராளமான நிகழ்ச்சிகள் இருக்கு. உங்களை நாளைக்கு சந்திக்க முடியுமா? என்று கேட்டார்.

நாளைக்கு எந்த டைம்?

இதே நேரத்திற்கு வந்திடுங்க என்றார்.

சரி என்று சொல்லி விட்டு ராஜேஷ் கிளம்பினார்.

கிளம்பும் முன் ரா இவ்வாறு வினாவினார். ஏற்கனவே எங்கள் ஆசிரமத்திற்கு என்று ஒரு வக்கீல் இருந்தார். அவர் சமீபத்தில் தான் இறைவனடி சேர்ந்தார். அதன் பிறகு என் மீது புகார் எதுவும் வரவுமில்லை. நானும் வக்கீல் தேடி செல்லவுமில்லை. உங்களுக்கு தெரிந்த வக்கீலை யாரையாவது சிபாரிசு செய்ய முடியுமா?

சரி நாளைக்கு வரும் போது நம்பர் தரேன்.

சரி நல்லது என்று சொல்லி வெறும் கையை நெற்றி அருகே கொண்டுவந்து திருநீறு பூசி விட்டார்.

பிறகு ராஜேஷின் சட்டை பையில் திருநீறு பாக்கெட் ஒன்றும் வந்திருந்தது. அதை அவனிடம் யாரும் கொடுக்கவுமில்லை, இவன் வாங்கவுமில்லை.

எப்படி இதெல்லாம் சாத்தியம் என்ற குழப்பத்திலே ஆசிரமத்தை விட்டு கிளம்பி வந்தான்.

ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்...

செந்தில் உங்களோட பாக்கெட்ல எதாவது இருக்குதான்னு பாருங்க.

அப்படில்லாம் எதுவும் இல்ல சார்.

பின்ன எப்படி என் பாக்கெட்டுல???!!!

சரி விடுங்க சார்.

உங்களுக்கு இதன் மேலெல்லாம் நம்பிக்கை இருக்கா? என்றான் ராஜேஷ்.

நிறையவே இருக்கு சார் என்றான் செந்தில்.

ஒரு பக்கம் நம்புற மாதிரியும் இன்னொரு பக்கம் சந்தேகமாவும் இருக்கு.

இப்படிபட்ட சக்தி வாய்ந்தவங்க எதுக்காக அவங்க சிஷ்யனையே கொலை எல்லாம் பண்ணனும்? இல்லன்ன அந்த பையன பெத்தவங்க பொய் சொல்லவேண்டிய அவசியமென்ன? இல்ல இவரை நம்பி வர்ற ஜனங்க எல்லோரும் ஏமாந்து தான் வர்றாங்களா? ஒரே குழப்பமா இருக்கு செந்தில்.

அப்போது ராஜேஷ் செல்லுக்கு ஒரு கால்.

பேசியது பெண் குரல்.

நிறைய பேசி இருந்தாள். பிறகு ராஜேஷ் சரி நீங்க இங்க வந்துடலாமே???!!! என்று கேட்டான்.

இல்ல சார் நீங்க இங்க வாங்க அந்த சாமியார் பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் அவன் ஒரு பொம்பள பொறுக்கி.

சரி எங்க என்றான் ராஜேஷ்.

இடம் சொன்னாள்.

ராஜேஷும் செந்திலும் அங்கே சென்றனர்.

முகம் மறைத்த படி ஒரு பெண் நின்றுருந்தாள்.

அவர்கள் பக்கம் திரும்பினாள். அருகில் அவளாகவே வந்து சார் இங்க வேணாம் அதோ அந்த பக்கம் போய்டலாம். ஆனா நீங்க மட்டும் வாங்க. ப்ளீஸ் என்றாள்.

சரி ஓகே செந்தில் இங்கயே இருங்க என்று சொல்லி விட்டு அந்த பெண் பின்னால் சென்றான் ராஜேஷ்.

முகம் மறைத்திருந்த துணியை விலக்கினாள். பேரழகு.

எதுக்காக வர சொன்னீங்க என்றான் ராஜேஷ்.

நீங்க ராவோட கேஸ எடுத்து நடத்துறதா எனக்கு தெரிஞ்ச சில அதிகாரிங்க கிட்ட இருந்து தகவல் வந்துச்சு. இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை ரா மிஸ் ஆகிட்டான். ஆனா இந்த தடவ மிஸ் ஆகிட கூடாதுன்னு தான் நானே சாட்சியமாக வந்து நிக்குறேன் என்றாள்.

சரி. முதல்ல உங்க பேரு சொல்லுங்க.

என் பேர் முக்கியமில்ல சார். நீங்க இந்த கேஸ்ல ராவ மாட்ட வைக்கணும்.

எதுக்கு மாட்ட வைக்கணும். உண்மையான ஆதாரம் இருந்தா அவனை தண்டிசுடலாம்.

அதுக்கு தான் ஆதரமா நானே வந்திருக்கேன். ஆனா என் முகம் வெளியே தெரிய கூடாது. எங்கே வந்தாலும் முகம் மூடி கிட்டு தான் வருவேன். அதுமட்டுமில்லாம. நீங்க அவனை கைது பண்ணிய பிறகு கோர்டில் அவனுக்கெதிரா சாட்சி சொல்ல மட்டும் தான் வருவேன் என்றாள்.

நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசிகிட்டே இருந்த காரியம் ஒன்னும் ஆகாது. எந்த விதத்துல அவனால பாதிக்கபட்டீங்கன்னு சொல்லுங்க என்றான் ராஜேஷ்.

ஒரு பெண் அதுவும் சாமியார் கிட்ட எப்படி பாதிக்கபட்டிருக்க முடியும் இந்த காலத்துல என்று கண்ணீர் வடித்தாள்.

ராஜேஷ்க்கு சங்கடமாக இருந்தது. எதுவும் பேசாமல் நின்றுருந்தான்.

அவள் அழுகையை கட்டு படுத்தி கொண்டு.

அந்த பூஜை பவுர்ணமி அன்று நடைபெறும். பல அழகான பெண்கள் நிர்வாண கோலமாக நின்னுட்டு இருப்பாங்க. ரா எந்த பெண்ணை விரும்புறானோ அந்த பெண்ணை ஒரு மேஜை மேல படுக்க வைப்பான். பிறகு அங்கிருக்கு வண்ண பூக்களில் மூன்றை எடுத்து ஒன்று நெற்றியில், ஒன்று தொப்புளில், ஒன்று ...

சரி சரி விடுங்க. வேணாம்... நீங்க சுருக்கமா சொன்னதே புரிஞ்சிடுச்சு. சரி நீங்க எப்போ வரணும்ன்னு சொல்றேன் அப்போ வாங்க. நீங்க பயபடமா இருங்க. கண்டிப்பா அவனுக்கு தண்டனை கிடைக்கும் என்று பேசி அனுப்பினான் ராஜேஷ்.

இரவு நேரம் செந்திலுடன் தன் வீட்டு மொட்டை மாடியில் பேசி கொண்டிருந்தான். சில ஆவணங்களும் கைகளில் இருந்தன.

வெயிட் செந்தில்.

கரக்ட்டா பாருங்க இது அவர் தானா?

ஆமா சார்.

இந்த ராவோட அப்பா எப்படி இவ்வளவு பெரிய ரிஷி கூட பழக்கம் இருக்க முடியும். அடுத்தடுத்த போட்டோக்களும் ஆச்சிரியத்தை தந்தன.

சரிங்க சார் இந்த போட்டோ பாருங்க.

இது யார் கூட.

இது யார் கூடயும் இல்ல. ரா ஸ்கூல் போட்டோ அப்போ கூட அவனோட தோற்றம் ஒரு ஆன்மீகவாதி போல தான் இருக்கு.

இவன் எந்த ஸ்கூல்ல படிசார்ன்னு டீடைல் எதாவது இருக்கா?

இல்ல சார்.

சரி அத எடுங்க.

இது அவன் காலேஜ் போட்டோ சார்.

காலேஜ் டீடைல் எதுவும் இருக்கா?

இருக்கு சார் ஆனா இன்னும் நம்ம கைக்கு கிடைக்கல.

பைலை குளோஸ் பண்ணிட்டு சிறுது நேரம் யோசித்தான். பிறகு பேச தொடங்கினான்.

அந்த பெண்ணும் அந்த சாமியார் வசமாக மாட்டிய பின்பு தான் நான் சாட்சி சொல்ல வருவேன் என்றும் சொல்லி விட்டாள். ஆனால் அந்த சாட்சியை கூட சுலபமாக கலைத்து விட முடியும்.

பிறரை கட்டுபடுத்த கூடிய சக்தி. தன்னை நம்பி வரும் பக்தர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் கூட்டம். இத்தனை பேரும் என்ன கிறுக்கர்களா? என்று செந்திலிடம் கூறினார் ராஜேஷ்.

அப்போ ரா நல்லவனா சார்?

ஏன் இருக்க கூடாது செந்தில்?

அப்படின்னா அவன் மேலே வர்ற புகார்?

யார் மேலே புகார் இல்ல?

சார்.... என்று இழுத்தான் செந்தில்.

நாளைக்கு பவுர்ணமி. நாம ஆசிரமத்தில உள்ளே போய் ஒரு வீடியோ எடுத்துட்ட நமக்கு ஆதாரம் கிடைசிடுமில்ல? அப்படி எதுவும் கிடைக்கலன்னா அப்படி எதுவும் அங்க நடக்குறதில்லன்னு முடிவு பண்ணி நம்ம வேலைய நாம பாக்கலாம் என்றான் ராஜேஷ்.

சார் இது நல்ல ஐடியா.

சரி இப்போ மணி என்ன என்றார் ராஜேஷ். வீட்டின் மொட்டை மாடி என்பதால் சாதரணமாக கைலி கட்டி கொண்டே வந்திருந்தனர். அதற்குள் அந்த பெண்ணிற்கு போன் பண்ண போனில் எண்ணை டயல் செய்யும் பொழுது தான் கவனித்தான் நேரத்தை. பிறகு வாட்சை பார்த்தான். போனை கட் செய்து விட்டு வாட்சை கையில் எடுத்தான்... பிறகு பின்வருமாறு செந்திலிடம் வியப்புடன் கூறினான்.

செந்தில், மேட் இன் சொர்க்கம்ன்னு ஏன் வாட்ச்ல போடல? என்றான்.

என்ன சார் சொல்றீங்க.

இது டைட்டான் வாட்ச்.

ராஜேஷ் செந்திலை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். இந்த கேஸ் கூடிய சீக்கிரத்துல முடிவுக்கு வந்திடும் என்றது அந்த புன்னகை.

அடுத்த நாள் காலை அந்த வாட்சை எடுத்து கொண்டு டைட்டான் வாட்ச் கடைக்கு சென்றான். அந்த வாட்சில் உள்ள கோட் நம்பரை வைத்து அவர்களின் கம்ப்யூட்டரில் செக் செய்து பார்க்க சொன்னான்.

அந்த ஊழியர் செக் செய்தான். மதுரையை அடுத்த ஏதோ குக்கிராமத்தின் பெயரை காட்டியது. அங்கே பத்துக்கும் மேற்பட்ட வாட்ச்கள் சென்றிருப்பது தெரியவந்தது.

அந்த கிராமம் எங்கே உள்ளது அதை பற்றிய தகவல் என்ன என்பதை அந்த கிராமம் அமைந்துள்ள நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் கேட்டு தெரிந்து கொண்டார். அப்படி விசாரிக்கையில் தான் தெரிந்தது அந்த கிராமத்தில் உள்ள அந்த விலாசம் ரா ஜியின் கிராம சேவா மைய பிரிவை சேர்ந்தது என்று.

அன்று இரவு பதினென்று இருக்கும்.

காதில் ஹெட் போன் மாட்டி கொண்டான். அந்த முகம் மறைத்து வந்த பெண்ணுடன் பேசி கொண்டே வந்தான்.

நான் இப்போ ஆசிரமத்துல நுழைஞ்சிட்டேன்.

எந்த பக்கம்? நீங்க நிக்குற இடத்திற்கு எதாவது அடையாளம் சொல்லுங்க.

ஒரு சிலையை சுட்டி காட்டினான்.

ரொம்ப வசதியா போச்சு... உங்க ரைட் சைட்ல பில்டிங் இருக்கும். அதுல பர்ஸ்ட் புளோர்ல எல்லோ கலர் ரூம் இருக்கும். அது மட்டும் தனியா தெரியும் பாருங்க. அந்த ரூம்ல தான் நான் சொன்ன பூஜா நடக்கும்.

சரி நான் வேலைய முடிச்சிட்டு கால் பண்றேன்.

ஒரு பைப் வழியாக ஏறினான். அங்கிருந்த ஜன்னல் வழியே தன் கேமராவை செலுத்தினான். உள்ளே நடந்து கொண்டிருக்கும் அத்தனை விசயங்களும் பதிவாகின.

நிர்வாணமான பெண்கள். யாரும் சுயநினைவுடன் நிற்பதாக தெரியவில்லை.

திடிரென அந்த அறையில் ஆளுகொரு பக்கமாய் பரபரப்பாக செல்ல தொடங்கினர்.

ராஜேஷும் கமெராவை மடக்கி உள்ளே வைத்து கொண்டு வந்த வழியே திரும்பி செல்ல தொடங்கினான்.

ஓரிடத்தில் வலது புறம் திரும்பவேண்டியத்தில் இடது புறம் திரும்பி வந்த வழியை மொத்தத்தையும் மறந்து போனான். ஏதோ கட்டிடம் கட்டும் பகுதிக்குள் நுழைந்திருந்தான்.

அங்கங்கே விளக்குகள் எரிய தொடங்கின. தூங்கி இருந்தவர்கள் பரபரப்புடன் அறையை விட்டு வெளியே வந்தனர்.

ராஜேஷ் எப்படியாவது ஓடி விட வேண்டுமென்று திரும்பினான்.

இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க ராஜேஷ் என்று ரா அவன் முன்பு நின்றுருந்தான்.

ராஜேஷ்க்கு பதில் சொல்ல முடியவில்லை.

கையில் வைத்திருந்த முறுக்கு கம்பியை கொண்டு ராஜேஷின் வயிற்றில் இறக்கினான்.

சில நிமிடத்தில் ராஜேஷ் பிணமாகி இருந்தான்.

பிறகு அவனை இழுத்து வந்து ஆசிரமத்தின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைக்க தொடங்கினான்.

எப்பொழுதும் இப்படி புதைக்க தொடங்கையில் தான் அவனது முற்கால நினைவுகள் வந்து போகும்.

ராவின் இயற்பெயர் காளிமுத்து.

கூவ ஆறு சாக்கடையாகி போன கரையோரத்தில் கொசுக்கடியில் குடிசையில் படுத்துறங்கும் அன்னாடகாட்சியின் முருகனுக்கு பிறந்த மகன் தான் காளிமுத்து. இரண்டு தினங்களுக்கு ஒரு முறை தான் சோறு. அதுவும் யாரோ காளிமுத்துவின் அம்மாவிடம் கொடுத்தனுப்பும் பழைய சோறு.

அதே பகுதியில் கூவ ஆற்றுக்கு சற்று தள்ளி ஆபிரகாம் என்ற நாற்பது வயதுடையவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மேஜிக்மேன். நாடக மேடையில் நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் பதினைந்து நிமிடம் இவரது மேஜிக் ஷோ நடைபெறும்.

ஆபிரஹாம் அந்த குடிசை பகுதியில் வந்து தன் மதத்தில் சேருபவர்களுக்கு தன்னுடைய மேஜிக் தொழிலை கற்று தருவேன் என்று ஆட்களை திரட்டி கொண்டிருப்பார். அதே போல மேஜிக் தொழிலையும் கற்று தருவார்.

அந்த கூட்டத்தில் காளிமுத்துவும் ஒட்டி கொண்டான். அவனது குடும்பம் அவனை எக்கேடா கேட்டு போறான் என்று விட்டுவிட்டனர்.

காளிமுத்து ராபர்ட் என்று மாறியிருந்தான்.

சில ஆண்டுகள் ஓடியது.

சர்கஸ் கம்பெனிகள் பொலிவிழந்து கொண்டிருந்த நேரமது. அங்கிருந்தவர்கள் அடுத்த தலைமுறைக்கு தங்களது தொழிலை சொல்லி தரவில்லை.

படிப்படியாக தான் நிகழ்சிகளை குறைக்க முடியும். அதே போல மக்கள் எத விரும்பி பக்குரான்களோ அந்த நிகழ்ச்சியை மட்டும் சேர்த்துட்டு மிச்சத்த குறைத்து கொள்ளலாம். அப்போ தான் ஜனங்க வருவாங்க என்று கம்பெனி முதலாளிகள் முடிவெடுத்தனர்.  அதன் படி மேஜிக் போலி என்று தெரிந்துவிட்டது மக்களுக்கு. ஒரு முறை இல்ல இரு முறை பாக்குறாங்க. அதுகப்புறம் அவங்க இதெல்லாம் விரும்புறதில்ல.

பிறகு ராபர்ட்டுக்கு அங்கு வேலை பறி போனது. தெருவில் வயித்து பசியில் ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது. ஓரிடத்தில் பெரும் கூட்டம்.

அங்கே சென்று பார்த்தான்.

ஒருவன் மேடை மீது நின்றுகொண்டு வாயிலிருந்து லிங்கம் எடுத்தான். விபூதியை வெறும் கையால் பூசி கொண்டிருந்தான்.

இவன் உடனே மேடையேறி அவன் அருகில் சென்றான். அவனது சட்டையின் கையின் இடுக்கில். காலரில் ஒளித்து வைத்திருந்த விபூதி கட்டிகளை அனைவருக்கும் எடுத்து காட்டினான். இவன் போலி இந்த மாதிரி ஆட்களை நம்பாதீங்க என்று கத்தி கொண்டிருந்தான்.

மெதுவாய் அந்த சாமியார் ராபர்டின் சட்டை பையில் இருந்து சில விபூதி கட்டிகளை எடுத்தான். இதோ பாருங்க. இது இவன் கொண்டு வந்தது. இது என்னிடம் இருப்பது போல உங்களிடம் காட்டி விட்டான்.

ராபர்ட்டுக்கு ஒரே ஆச்சிரியம். பலே மேஜிக்மேன் தன்னையே ஏமாற்றிவிட்டான் இவன் என்று தன் மேல் கோப பட்டு கொண்டான்.

மெரினாவில் நடக்கும் பொழுதெல்லாம் ஜோடிகள் செய்யும் சில்மிஷத்தை காணும் பொழுது தன் வயதை நினைத்து பார்த்து வேதனை கொள்வான்.

ராஜேஷை முழுதும் புதைத்து விட்டான்.

தான் செய்வது தவறேன்னும் மனசாட்சி சொல்லும் பொழுதெல்லாம் மனதை தேற்றி கொள்ள.

என்னுடைய அந்நியாயைத்தை நியாய படுத்துவதில்லை. இந்த முட்டாள் மக்கள் திருந்தும் பொழுது தானும் திருந்துவிடுவேன் என்று தனக்கு தானே சொல்லி கொள்வான்.

மறு நாள் காலை அந்த பெண் ஆசிரமம் வழியாக காரில் மெதுவாய் சென்ற படி வேவு பார்த்தாள். எப்பொழுதும் போதே மக்கள் கூட்டம் கூட்டமாய் ஆசிரமத்திற்கு  சென்று கொண்டிருந்தனர்.

இரா ஜியின் சம்பவங்கள் தொடரும்...

- திவான்